கொரோனா- இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடம்- 9,674 பேர் பாதிப்பு
சென்னை: கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மகாரஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 27,524 பேரும் தமிழகத்தில் 9,674 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தொடக்கத்தில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனையடுத்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களில் கொரோனா கோரத் தாண்டவமாடியது.
ஆனால் கேரளாவில் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,524 ஆகும். மகாராஷ்டிராவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் மரணித்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மொத்தம் 1,019 ஆக அதிகரித்துள்ளது.

2-வது இடத்தில் தமிழகம்
இதனையடுத்து 2-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வார கால அளவில் தமிழகத்தில் இது குறைவான பாதிப்பு ஆகும். தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 9,674 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவும் உயிரிழப்புகளும் தொடர்கிறது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் 66 ஆக அதிகரித்துள்ளது.

3-வது இடம் குஜராத்
குஜராத் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு நேற்று மட்டும் 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 9,592 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்கியுள்ளது. மொத்தம் 586 பேர் கொரோனாவால் குஜராத்தில் மரணித்துப் போயிருக்கின்றனர்.

டெல்லியில் நிலவரம்
டெல்லி மாநிலம் தற்போது கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 8,470 ஆக உயர்ந்தது. டெல்லியில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்தம் 115 பேர் கொரோனாவால் டெல்லியி0ல் மாண்டு போயுள்ளனர்.

மே.வங்கத்தில் மரணம் அதிகம்
இந்திய அளவில் 5,6-வது இடங்களில் உள்ள ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால் இம்மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. மத்திய பிரதேசத்தில் 237 பேரும் ராஜஸ்தானில் 125 பேரும் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர். மேற்கு வங்கத்தில் கொரோனா உயிரிழப்புகள் 215 ஆக அதிகரித்துள்ளன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications