தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று 2,146 பேர் பாதிப்பு - 25 பேர் மரணம்

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 2,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 2,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 7,18,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Coronavirus updates : November 10 Tamilnadu 2,146 affected covid 19

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2,146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 48 ஆயிரத்து 225ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2,237பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,18,129ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 25 உயிரிழந்துள்ளனர். 9பேர் தனியார் மருத்துவமனையிலும், 16 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 387ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 72,257 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 7லட்சத்து 9ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,335 பேர் ஆண்கள், 811 பேர் பெண்கள். 207 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+