தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று 5,363 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,740 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5,363 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,740 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,325 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,282 பேர் ஆண்கள், 2,043 பேர் பெண்கள். கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,363 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,740 ஆக அதிகரித்துள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 84,979 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் கொரோனா பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,25,037 ஆக அதிகரித்துள்ளது. 177 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்தனர். 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,010 ஆக அதிகரித்துள்ளது. 46249 பேர் தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!












Click it and Unblock the Notifications