தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா டெஸ்ட்.. ஒரே நாளில் 90,607 சோதனை.. 5692 பேருக்கு தொற்று
தமிழகத்தில் 5692 பேருக்கு தொற்று பாதிப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 90,607 டெஸ்ட்கள் இன்று செய்யப்பட்டுள்ளதாகவும், 5692 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1089 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் சுகாதாரத்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
லாக்டவுனில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொற்று பாதிப்பு என்பது அதிகமாகி கொண்டே வருகிறது.. அதே சமயம், அவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியும் வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பரிசோதனை
இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்திற்கு கீழ் குறைக்க முயற்சி செய்கிறோம்.. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது... இந்த மரண விகிதத்தை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைப்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது.

தொற்று பாதிப்பு
தொற்று பாதிப்பு விகிதத்தை 6.4. சதவீதம் ஏற்கனவே குறைந்துள்ளது.. கொரோனா தொற்று கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்கிறோம். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு கவனித்துக் கொள்கிறது" அமைச்சர் கூறினார்.

அறிக்கை
இதனிடையே, சுகாதாரத்துறை சார்பில் கொரோனா நிலவரம் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.. அதில், தமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... 66 பேர் உயிரிழந்துள்ளனர்.. வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 13 பேர்... இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை
மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,089 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 66 பேர் (அரசு மருத்துவமனை-43, தனியார் மருத்துவமனை -23) பலியாகி உள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,08,210 பேர் குணமடைந்துள்ளனர்.

தீவிரம்
இன்றைய நிலவரப்படி, 46,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 90,607 டெஸ்ட்கள் இன்று செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 68,15,644 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.. இந்த டெஸ்ட்டுக்காக அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 112 என மொத்தம் 178 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்












Click it and Unblock the Notifications