கொரோனாவை விரட்ட தடுப்பூசி எதற்கு.. ஸ்ப்ரே அடிச்சிக்கலாம்.. ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல் தகவல்
சென்னை: மூக்கு வழியாக ஸ்ப்ரே அல்லது இன்ஹேலர் மாதிரி, கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் ஆய்வுகளில், தீவிரமாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வைரஸ் அடர்த்தியை குறைக்க உதவும் ரெம்டெசிவிர் மற்றும் ஃபாவிபிராவிர் ஆகிய மருந்துகளை, மருந்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், கொரோனா வைரசுக்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியை அக்டோபரில் சந்தைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைத் தவிர, சீனா நேஷனல் பயோடெக் குழுமமும் (சி.என்.பி.ஜி) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதன் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு ஏற்கனவே, மனிதர்களிடம் டிரையலை ஆரம்பித்துவிட்டது. அந்த ஆய்வு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தில் உள்ளது. இதுவரை வெற்றிகரமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது.

இன்ஹேலர், ஸ்ப்ரே
இதில் மற்றொரு முக்கியமான விஷயமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தடுப்பூசியை இன்ஹேலர் அல்லது மூக்கு ஸ்ப்ரே என்ற வகையில் செலுத்துவது இன்னும் கூடுதலாக பலன் தரும் என்று கூறியுள்ளனர்.

நுரையீரலுக்கு நல்லது
நுரையீரல் பாதையை கொரோனா வைரஸ் பாதிக்கக் கூடியது என்பதால் நேரடியாக நுரையீரலுக்கு மருந்துகளை செலுத்துவது மக்களை காப்பாற்றுவதற்கு உதவும் வழி என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதிலும், குறிப்பாக நேரடியாக நுரையீரலுக்கு மருந்து செல்வதால் வயதானவர்களை காப்பாற்றுவதற்கு பெருமளவுக்கு உதவக் கூடும் என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி துறை விஞ்ஞானிகள்.

எதிர்பார்ப்பு
இது போல, மருந்துகளை மூக்கு வழியாக உள்ளே இழுத்துக் கொள்வதால் நுரையீரலின் மேற்பகுதியில் அது படிந்து வைரஸ் பாதிப்பை குறைக்கும். நுரையீரல் மூச்சுப் பாதையிலும் இந்த மருந்து படிவதால் வைரஸ் பாதிப்பு குறையும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தடுப்பூசியை விட இது எளிதான நடைமுறை என்பதால் இந்த வகை மருந்து மீதான எதிர்பார்ப்பு சர்வதேச சமூகத்தில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications