தென்கொரியா கொடுத்த நம்பிக்கை.. திடீரென கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு.. இதுதான் பின்னணியா?
தமிழகத்தில் திடீரென்று பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளித்து பெரிய அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் திடீரென்று பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளித்து பெரிய அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பின் முக்கியமான அதிரடி திட்டங்கள் இருக்கிறது என்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009 ஆக உள்ளது. மொத்தம் 1605 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
சென்னையில் மட்டும் 3046 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4364 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளனர்.

கட்டுப்பாடுகள் தளர்வு
இந்த நிலையில் தமிழகத்தில் திடீரென்று பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளித்து பெரிய அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஃசோன் வேறுபாடு இன்றி அனைத்து மண்டலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னையிலும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. கடைகள் இயங்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி முதல் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது.

நேரம் அதிகரிப்பு
தமிழகத்தில் கடைகள் இயங்க காலை 6 மணிக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் இயங்கவும் நிறைய தளர்வுகள் உடன் அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பின் முக்கியமான அதிரடி திட்டங்கள் இருக்கிறது என்கிறார்கள். தமிழகத்தில் கேஸ்கள் அதிகாரிக்கும் நிலையிலும் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் தமிழக அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்து மிக சரியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்கிறார்கள். இதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதான் வழி
தமிழகத்தில் இப்படி திடீர் என்று லாக்டவுனை திறக்க காரணம் இருக்கிறது. அதன்படி வரும் 18ம் தேதி மத்திய அரசு பெரும்பாலும் ஊரடங்கை முடிவிற்கு கொண்டு வரும் என்று கூறுகிறார்கள். அப்போது ஊரடங்கை முடிவிற்கு கொண்டு வந்தால் மக்கள் மொத்தமாக கூட்டமாக வெளியே வருவார்கள். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் படிப்படியாக ஊரடங்கை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் தற்போது கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்தி இருக்கிறார்கள். இதுதான் சரியான வழி.

கொரோனா வாய்ப்பு குறைவு
ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை நாட்டில் தொழில்களை தொடங்க வேண்டும். மக்கள் இந்த கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்து இருக்கிறது. இதனால் இனி கொரோனா மீது கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தை மீட்பது குறித்து கவனம் செலுத்த இருக்கிறார்கள். இதனால்தான் தற்போது தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக அளவில் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

முதல் காரணம்
இப்படி லாக்டவுனை திடீரென்று தளர்த்த பொருளாதார சரிவு மிக முக்கிய காரணம் ஆகும். இன்னும் தொடர்ந்து லாக்டவுனை நீட்டித்தால் பொருளாதார சரிவை கட்டுப்படுத்த முடியாது. பெரிய அளவில் சரிவு ஏற்படும். தமிழகத்தில் சென்னையின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வளவு சீக்கிரம் தொழில்களை தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொழில்களை தொடங்க வேண்டும் என்று அரசு இப்படி முடிவு எடுத்துள்ளது.

தென் கொரியா இப்படி
கொரோனா பாதிப்பு தென் கொரியாவில் வேகமாக பரவிய போது அந்த நாடும் இதைத்தான் செய்தது. அங்கு பெரிய அளவில் லாக்டவுன் எல்லாம் இல்லை. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்றவர்கள் எல்லாம் எப்போதும் போல பணிக்கு சென்றார்கள். அதோடு அங்கு மால்கள் கூட இயங்கியது. அங்கு இப்போது கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார சரிவும் இல்லை. இதைத்தான் இந்தியாவில் பின்பற்ற இருக்கிறார்கள் என்கிறார்கள்.

இதுதான் இனி மாடல்
இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த நபர் மற்றும் அவரின் உறவினர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படுவார்கள். மற்ற எல்லோரும் எப்போதும் போல பணிக்கு செல்வார்கள். மக்கள் வெளியே வருவதில் பெரிய கட்டுப்பாடுகள் இருக்காது என்கிறார்கள். அதோடு அறிகுறி இல்லாமல் கொரோனா வரும் நபர்கள் இனி வீட்டிலேயே சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அரசு கூறியுள்ளது.

சிகிச்சை முறை
இதனால் கொரோனா ஒரு பக்கம் இருக்கும் மற்ற பணிகள் எல்லாம் இன்னொரு பக்கம் நடக்கும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்த முடிவில் இறங்கி அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இந்த நாடுகள் கொடுத்த நம்பிக்கைதான் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் குறைய காரணம் என்கிறார்கள். பெரும்பாலும் மே 17க்கு பிறகு கட்டுப்பாடுகள் நீடிக்காது என்றும் கூறுகிறார்கள்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications