இது லாஸ்ட் சான்ஸ்.. இந்த 14 நாட்களை விட்டு விட்டால்.. சீனா, இத்தாலி நிலையே ஏற்படும்.. கவனம் ப்ளீஸ்!
14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது எதனால்?
சென்னை: 14 நாட்கள் நம்மை நாமே தனிமைப்படுத்துதல் என்பது அவசியமானது.. கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, இதைதான் அரசும் வலியுறுத்துகிறது... இந்த 14 நாட்கள் தனிமை ஏன்? அது என்ன குறிப்பிட்ட 14 நாட்கள் மட்டும்? 14 நாட்களில் எல்லாம் சரியாகிவிடுமா? என்ற பல கேள்விகள் வெகுஜன மற்றும் கிராமப்புற மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு செய்திதான் இது!
தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நீர்துளிகளால் இந்த கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்கிறது சமீபத்திய ஒரு அமெரிக்க ஆய்வு.. இந்த வைரஸ் 3 மணி நேரம் உயிருடன் வாழ கூடியவை.

வைரஸூக்கு பெயர் வைத்தோமே தவிர, இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.. நிபுணர்களும், வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர்.. இந்த வைரஸ் மனித முடியை விட 30 மடங்கு சிறியதாம்.. காற்றில் பல மணி நேரம் உயிர் வாழக் கூடியவை என்பதால்தான் இவ்வளவு பயம் நம்மை சூழ்ந்துள்ளது.
வெறும் காற்று என்றில்லை.. அட்டை பொருள், பிளாஸ்டிக், ஸ்டீல் என பொருட்களில்வட 2, 3 நாட்களுக்கு உயிருடன் இந்த வைரஸ் இருக்குமாம்.. அதற்காகத்தான் எந்த பொருளையும் தொடக்கூடாது என்றும், அப்படியே தொட்டாலும் முகத்தில் கையை வைக்க கூடாது என்றும், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்றும் அட்வைஸ் செய்து கொண்டே உள்ளனர்.
அதிகபட்சமாக இந்த வைரஸ் 14 நாட்கள்தான் உயிரோடு இருக்கும்.. இதன் ஆயுளே அவ்வளவுதான்.. அதனால்தான் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் 14 நாட்கள் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி விடுகிறார்கள்.. ஒருவேளை இவருக்கு தொற்று இருந்தால், 14 நாட்கள்தான் அந்த வைரஸ் உயிரோடு இருக்கும்.. இவர் அப்படி தனிமைப்படுத்தப்படும்போது, அந்த வைரஸ் வேறு ஒருவருக்கும் பரவாமல் தடுக்கப்பட்டு விடும்.
அதனால்தான் 14 நாட்கள் என்று குறிப்பிட்டு சொல்லி, அதற்கான விடுமுறையை அளித்துள்ளனர்.. ஆனால் 14 நாட்கள் என்பதை இத்தாலி சீரியஸாக எடுத்து கொள்ளவே இல்லை.. லீவு தந்துவிட்டார்கள் என்று இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டனர்.. பீச், தியேட்டர் என்று சுற்றி கடைசியில் இன்று சீனாவை விட மோசமான நிலைமைக்கு இத்தாலி வந்துவிட்டது. இப்போது நல்ல ஒரு வாய்ப்பினை அரசாங்கம் நமக்கு வழங்கி உள்ளது..
14 நாட்கள் வீட்டிலேயே நம்மை தனிமைப்படுத்தி கொண்டால் மிகப்பெரிய அழிவு, துர்நிலையில் இருந்து இந்தியா தப்பிக்கலாம்.. உண்மையிலேயே மனித குலத்துக்கு இந்த கொரோனா வைரஸ் ஒரு சவால்தான்.. அதேசமயம் உயிர்காக்கும் கடைசி வாய்ப்பும்கூட.. இந்த 14 நாட்களை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளாவிட்டால், சீனா போலவோ, இத்தாலி போலவே, ஈரானை போலவோ.. நாளை இந்தியாவும் உருமாறலாம்... உருக்குலையலாம்.. கவனம்!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications