இந்த 4 விஷயம் ரொம்ப முக்கியம்.. சென்னை மழைக்கு இடையே.. களமிறங்கிய "ஸ்பெஷலிஸ்ட்".. பறந்த வார்னிங்
சென்னை: சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
சென்னையில் கடந்த வாரம் விடாமல் மழை பெய்தது. தொடர்ந்து தீவிர மழை பெய்தாலும் பெரிதாக சாலைகளில் வெள்ளம் தேங்கவில்லை. மழை பெய்த சில நிமிடங்களில் வெள்ளம் வெளியேறியது.
இதற்கு சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ள நீர் குழாய்கள்தான் காரணம். வெள்ளம் வடிவதற்காக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதே சமயம் கத்திப்பாரா உள்ளிட்ட சப் வே பாலங்கள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கே தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முக்கிய உத்தரவு: சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன்படி பின் வரும் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
1 சென்னை சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கெல்லாம் தேங்குகிறதோ அங்கெல்லாம் உடனே கண்காணித்து ஆக்சன் எடுக்க வேண்டும்.
2 மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த குழுக்கள் நேரடி ஆய்வு, சிசிடிவி கேமரா ஆய்வுகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
3 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும். இதற்காக உடனுக்குடன் சுரங்க பாதைகளுக்கு சென்று சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
4 சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நியமனம்: சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். ராதாகிருஷ்னன் இந்த பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே சிங்கார சென்னை திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக புதிய டீம் ஒன்றையும் களமிறக்கி உள்ளார். அதோடு இதுவரை முடிக்கப்பட்ட பணிகள், முடிக்கப்படாத பணிகள், அறிவிக்கப்பட்ட பணிகளை லிஸ்ட் எடுத்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார்.
மேலும் சென்னையில் நடக்கும் ஒவ்வொரு பணிகள் குறித்தும் தனக்கு அப்டேட் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். இந்த நிலையில் ராதாகிருஷ்னன் பின்வரும் முக்கியமான உத்தரவுகளை மாநகராட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதில், சென்னையில் எங்கெல்லாம் சாலை பணிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உட்புற சாலை பணிகளை முடிக்க வேண்டும்.

முக்கியமாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். இதில் தாமதம் இருக்க கூடாது. இது போன்ற சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்ய வேண்டும். சாலைகளை முறையாக மில்லிங் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலை - மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் வரும் சாலைகளை அவர்களுடன் இணைந்து பராமரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர் பேரிடர் மீட்பு பணிகளில் ஸ்பெஷலிஸ்ட். இதற்காக ஐநாவில் கூட பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில்தான் சென்னை மழை குறித்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications