விஜயபாஸ்கர், வேலுமணி.. அடுத்தது 'மின்சார’ துறைக்கு ஷாக்.. சிக்கப் போகும் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி?
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கோலோச்சிய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சிக்கிவிட்டனர். அடுத்ததாக மின்சார கொள்முதலில் பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மின்சாரத்துறை அமைச்சர்களாக இருந்த நத்தம் விஸ்வநாதன் மற்றும் பி.தங்கமணி இருவரும் சிக்கக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைமை கணக்கு தணிக்கை (சி.ஏ.ஜி). வெளியிட்ட அறிக்கைகள் எதுவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏனெனில் அந்த அறிக்கைகளில் அதிமுக அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த சி.ஏ.ஜி. அறிக்கைகளை முன்வைத்துதான் பல்வேறு அதிமுக ஆட்சிக் கால ஊழல் முறைகேடுகளை அறப்போர் இயக்கம் வெளிப்படுத்தி வந்தது. அப்படி அறப்போர் இயக்கம் வெளியிட்டதுதான் அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சார கொள்முதலில் நிகழ்ந்த பல்லாயிரம் கோடி ஊழல் முறைகேடு. அப்படி என்ன செய்தார்கள் மின்சார துறை அமைச்சர்களாக நத்தம் விஸ்வநாதனும் பி.தங்கமணியும்?

தனியாருடன் நீண்டகால ஒப்பந்தம்
எளிதாக சொன்னால், மின்சார வாரியம் சுயமான மின் உற்பத்தியை முடக்கிவிட்டு தனியாரிடம் பல மடங்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்தது; அதுவும் நீண்டகால அடிப்படையில் இந்த கொள்முதல் செய்வது என ஒப்பந்தங்கள் போட்டிருக்கின்றனர். தற்போது மின்சார வாரியமானது தனியாரிடம் 2028-ம் ஆண்டு வரை மின்கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். சி.ஏ.ஜி. அறிக்கையில் இதுதான் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?
சி.ஏ.ஜி. அறிக்கையில், 2013- 2018-ம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 14 ஆயிரம் கோடி நட்டம்; மத்திய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்களால் ரூ.2,381.54 கோடி கூடுதல் செலவு; மின் திட்டங்களை உரிய காலத்தில் செய்யாமல் விட்டதால் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் ரூ.2,099.48 கோடி கூடுதல் செலவு; மின் உற்பத்தி நிறுவனங்களில் மிக மிக குறைவான தகுதி கொண்ட நிறுவனத்திடம் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 493.74 கோடி கூடுதல் செலவு; கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூ. 349.67 கோடி இழப்பு என அடுக்கிக் கொண்டே போகிறது. சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் போட்டதில் ரூ. 605.48 கோடி இழப்பு; ஜி.எம்.ஆர் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டித்து மின்சாரம் வாங்கியதில் ரூ824.77 கோடி ரூபாய் இழப்பு; சந்தை விலையை விட ஒரு யூனிட் மின்சாரத்தை மிக மிக அதிகபட்சமாக ரூ12.77க்கு பெற்றதன் மூலம் பல நூறு கோடி பேரிழப்பு என நீள்கிறது இந்த முறைகேடு பட்டியல்.

ரூ1 லட்சம் கோடி இழப்பு?
அறப்போர் இயக்கம் சென்னையில் இந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நீண்டகால ஒப்பந்தங்கள், அதிக விலைக்கு மின்சார கொள்முதல் ஆகியவற்றால் மின்சார வாரியத்துக்கு சுமார் ரூ1லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் தமிழக மின்சார வாரியத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையும் இருக்கிறது. தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?
வெள்ளை அறிக்கையில் மின்சார வாரியத்தின் நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மின்வாரியத்தின் மொத்த செலவுகளில் மின் கொள்முதல் செலவினங்கள் சதவீதமானது 2020-21ல் 71.03%. 10 ஆண்டுகளில் மின் கொள்முதல் செலவுகள் 125.02% அதிகரித்துள்ளது. 2011-12-ல் ஆண்டு மின்வாரியத்தின் கடன் ரூ31040.12 கோடி. 2020-21-ல் கடன் நிலைமை ரூ1,34,119.94 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் மின்சார வாரியத்தின் கடன் 332.09% ஆக அதிகரித்துள்ளது. சொந்த மின்சார உற்பத்தியை முடக்கி வைத்து ஆதாயம் பெறுவதற்காக தனியாரிடம் இருந்து பல மடங்கு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதால் மின்சார கொள்முதல் செலவு 10 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பதையும் இந்த வெள்ளை அறிக்கை விவரித்திருக்கிறது.
Recommended Video

சிக்கும் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி?
இப்படி மின்சார துறையில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் அங்குலம் அங்குலமாக பட்டவர்த்தனமாக அம்பலமாகி இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சார துறை ஊழல்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் கதவுகளும் தட்டப்பட்டிருக்கின்றன. சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கினால் அடுத்ததாக மாஜி மின்சாரத்துறை அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதனும் பி.தங்கமணியும் சிக்குவது கன்பார்ம். ஜெயலலிதாவின் 2011-16 ஆட்சிக் காலத்தில் ஐவர் அணியில் கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். அவர் ஆடிய ஆட்டத்தை கண்டு மிரண்டு போன ஜெயலலிதா, நடவடிக்கை எடுத்து ஒதுக்கி வைத்தார். 2016-ல் தங்கமணி மின்சாரத்துறை அமைச்சராக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் வலது இடதுமாக இருந்தவர் வேலுமணியும் தங்கமணி. இப்போது வேலுமணி லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கிவிட்டார். அடுத்தது தங்கமணியும் அவருக்கு பாதை போட்டுக் கொடுத்த நத்தம் விஸ்வநாதனும்தான் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக!












Click it and Unblock the Notifications