கொரோனா.. உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் வந்தாச்சு.. உற்சாக தகவல் சொன்ன விஜயபாஸ்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் காக்கக் கூடிய ஊசி மருந்துகள், தமிழகம் வந்துள்ளதாகவும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: சிகிச்சைக்கு உயர்ந்த விலை கொண்ட மருந்துகளை ஊசிகளை கொள்முதல் செய்வதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1200 குப்பிகள் Tocilizumab (400 mg) 42,500 குப்பிகள் remdesivir (100 mg) வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மருந்துகள்

மருந்துகள்

இதேபோன்று 1 லட்சம் குப்பிகள் enoxaparin (40mg) வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில், எல்லா மருந்துகளிலும் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு வந்து சேர்ந்துள்ளன மீதமுள்ள மருந்துகள் ஓரிரு நாளில் வந்தடையும். தேவைக்கேற்ப மேலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனைகள்

மாவட்ட மருத்துவமனைகள்

விலை உயர்ந்த இந்த மருந்துகள் ஏற்கனவே மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மிக கடுமையாக கொரோனா பரவி வரும் நிலையில் எப்படியாவது அதை கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை பெறுபவர்களை உடனடியாக குணப்படுத்தி அனுப்ப வேண்டியது அவசியமாகின்றது.

உடனடி குணம்

உடனடி குணம்

ஏனெனில், பாதிப்பு அதிகமானால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைப்பது சிக்கலாகி விடும். எனவே தரமான மருந்துகளை வாங்கி உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதில் அரசு தீவிரமாக இருப்பது தெளிவாகிறது.

வைரசை குறைக்கும்

வைரசை குறைக்கும்

மேற்சொன்ன, இந்த மருந்துகள் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்தவையாகும். இதனால் வைரஸ் லோடு என்பது வெகுவாக குறைக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது. ஆனால், குணமடையும் வேகம் எத்தனை நாட்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+