BNYS மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு கலந்தாய்வு
சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இளங்கலை பட்டபடிப்பிற்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
2021- 2022 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த அக்டோபரில் ஆன்லைனில் டவுன்லோடு செய்யப்பட்டு அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பப்பட்டது.
மருத்துவராகும் கனவில் இருக்கும் மாணவர்கள், நீட் தேர்வால் தங்கள் கனவு கானல் நீராகி போகும் நிலை உள்ளது. அத்தகைய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது Bachelor of Naturopathy and Yogic Science. இந்த படிப்புக்கு நீட் தேர்வு இல்லை.

எம்பிபிஎஸ்ஸை போல் ஐந்தரை ஆண்டுகள் படித்தால் டாக்டர் ஆகிவிடலாம். மக்களுக்கு சேவை செய்யலாம். இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்களை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் விநியோகித்தது. தற்போது சித்தா, ஆயுர்வேதம், உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் முடிவடைந்தது.
இந்த நிலையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை வைத்து இன்றைய தினம் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு அதாவது வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்காக 19 கல்லூரிகள் உள்ளன. இந்த 19 கல்லூரிகளில் இரு அரசு கல்லூரிகளில் 160 இடங்களும் மீதமுள்ள 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்டவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா மருத்துவமனையில் தேர்வு குழுவினரால் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
3 நாட்களுமே 4 வகையான நேரங்களில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். இருப்பிடச் சான்றிதழ், ஜாதிசான்றிதழ், புலம்பெயர்ந்தவர்களுக்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேர்வு குழுவின் அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications