நியாயப்படி வாக்கு எண்ணிக்கை நடக்கிறதா? அறிக்கை தேவை.. இரவோடு ஹைகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை: விதிகளை பின்பற்றியே, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக நாளை, தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வழக்கை இன்று இரவு அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் இவ்வாறு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருப்பதாகவும், ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாகவும் அந்த புகாரில், ஸ்டாலின் ்கூறினார். அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காதததால், நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறினார்.
அதன்படி, திமுக சார்பில், ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை அவசர வழக்காக இரவோடு இரவாக விசாரித்தது உயர்நீதிமன்றம்.
இன்று இரவு சுமார் 10.45 மணி அளவில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விதிகளை பின்பற்றியே, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
எங்கெல்லாம் போலீசார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்களோ அதையெல்லாம் வீடியோவாக எடுத்து தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும், சட்டப்படி தவறு என்பதால் நீதிமன்றத்தின் மூலமாக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது ஆர்.எஸ்.பாரதி, எச்சரித்தார்.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!












Click it and Unblock the Notifications