ரூ 25 லட்சம் மோசடி! போன் போட்டு மிரட்டிய பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்! சென்னை தம்பதி புகார்
சென்னை: வீடு வாடகைக்கு கொடுப்பதாக கூறி தம்பதியிடம் பிரபுதேவாவின் சகோதரரும் நடிகருமான நாகேந்திர பிரசாத் ரூ 25 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக தம்பதி பகீர் புகாரை தெரிவித்துள்ளனர்.
நடன கலைஞர் சுந்தரத்திற்கு 3 மகன்கள், பிரபுதேவா, ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத். இவர்களில் நாகேந்திர பிரசாத் மீதுதான் இந்த மோசடி புகாரை தம்பதி கூறியுள்ளனர்.

இதுகுறித்து வீடு வாடகைக்கு குடியிருக்கும் பிரவீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் முடிந்து நாங்கள் குடியிருக்க வீடு தேடி வந்தோம். அப்போது தேனாம்பேட்டையில் ஒரு அபார்ட்மென்டில் வீடு வாடகைக்கு என போர்டு இருந்தது.
அதில் ஒரு போன் நம்பரும் இருந்தது. அப்போது அந்த நம்பருக்கு கால் செய்தோம். அப்போது ஓனர்தான் போனை எடுத்தார். அவர் வீட்டை போய் பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றார். நாங்கள் வீட்டை பார்த்தோம். அப்போது அந்த ஓனர், நான் ஒரு செலிபிரட்டி, இந்த வீட்டை ஒரு கம்பெனிக்கு கொடுத்துள்ளேன்.
அந்த கம்பெனிதான் இதை கேர் டேக்கராக பார்த்துக் கொள்கிறார்கள். எனவே நீங்கள் கம்பெனியிடம் பேசுங்கள் என்றார். நானும் கம்பெனியிடம் பேசினேன். அப்போது அந்த வீட்டுக்கு லீசுக்கு செல்ல ரூ 25 லட்சம் என்றார்கள். இதை நீங்கள் கொடுத்தால் நாங்கள் அந்த ஓனருக்கு வாடகையாக கொடுத்திடுவோம் என்றார்கள். அதற்கான ஆவணங்களும் உள்ளன.
நாங்கள் காலி செய்யும் போது சொன்னால் அந்த ரூ 25 லட்சத்தை அவர்கள் தருவதாகவும் கூறினார்கள். அப்போது போனில் பேசிய பெண் ஓனரை நான் மீண்டும் தொடர்பு கொண்டேன். வாடகையை நான் உங்களிடமே கொடுத்துவிடுகிறேன். எதற்காக கம்பெனியெல்லாம் என்றேன். அதற்கு அந்த பெண் ஓனர், கம்பெனியிடம் கொடுத்தால் எங்களுக்கு வாடகை அதிகமாக கிடைக்கும் என்றார்.
இதனால் நாங்களும் ரூ 25 லட்சத்தை கொடுத்தோம். அந்த நிறுவனமும் ஓனருக்கு 8 மாதங்களாக வாடகைத் தொகையை கொடுத்துக் கொண்டே வந்தார்களாம். அதன் பிறகு அந்த கம்பெனியே இல்லை. எங்களுக்கு இரு ஆண்டுகள் அக்ரிமென்ட் போட்டதால் நாங்கள் போலீஸில் புகார் அளித்துள்ளோம். ஓனரிடம் கேட்ட போது நீங்கள் பணத்தை கம்பெனியிடம்தானே கொடுத்தீர்கள். அங்கே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்.
ஆனால் அந்த கம்பெனி யார் என்றே எங்களுக்கு தெரியாது. அந்த கம்பெனியும் ஓனரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். அந்த கம்பெனி குறித்து நல்ல ரிவ்யூக்கள் இருப்பதால் அங்கேயே பணத்தை கொடுங்கள் என ஓனர் கூறினார். தற்போது கம்பெனி செய்த தவறுக்கு நாங்கள் வாடகை கொடுக்கவில்லை என கூறி எங்கள் வீட்டின் பூட்டை நாங்கள் திறக்காதபடி இரும்பு தகடு போட்டு அடித்துவிட்டார்கள்.
குழந்தையை பள்ளியிலிருந்து கூட்டிக் கொண்டு வந்த அந்த அரை மணி நேரம்- ஒரு மணி நேரத்திற்குள் இப்படி ஒரு செயலை செய்துள்ளார்கள். வீட்டிற்குள் எங்களது செல்லபிராணி இருக்கிறது. கம்பெனியின் பெயர் STSK Proptech. இந்த வீட்டின் ஓனர் நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தான்.
அவர்தான் எங்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார். எங்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தால் போதும். இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. இன்று காலை எனக்கு நாகேந்திர பிரசாத் போன் செய்து வீட்டை காலி செய்துவிடுங்கள். எனக்கு நீங்கள் பணம் கொடுத்தது பற்றி எல்லாம் தெரியாது. காலி செய்யாவிட்டால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என மிரட்டினார்.
வீட்டை பார்த்ததும் போன் நம்பருக்கு போன் செய்தேன். அப்போது ஓனர்தான் கம்பெனி குறித்து பேசினார். நானும் பெரிய பிரபலங்கள் நிறைய வீடுகளை வைத்திருப்பதால் இது போல் கம்பெனியிடம் பொறுப்பை விட்டுவிடுகிறார்கள் என நானும் நினைத்துவிட்டேன். இப்படி இந்த கம்பெனி ஏமாற்றும் என எனக்கு எப்படி தெரியும்.
இந்த வீட்டுக்கு வந்து 2 வருடங்கள் ஆகிறது. நான் 32 ஆயிரத்திற்கு வாடகைக்கு கேட்டேன். ஆனால் அந்த பெண் ஓனர் நீங்கள் லீசுக்கு கம்பெனியிடம் கொடுத்தால் எனக்கு கூடுதலாக ரூ 4 ஆயிரம் கிடைக்கும். எனவே 36 ஆயிரம் வாடகையை பெற்றுக் கொள்வேன் என அந்த ஓனர் தெரிவித்தார். இதையடுத்து நாகேந்திர பிரசாத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்த போலீஸார், வீட்டின் சீலை அகற்றினர். பிரவீனும் தனது செல்லபிராணியை மீட்டார்.
நாகேந்திர பிரசாத் - இவர் மைசூரில் பிறந்தவர். பம்பாய் படத்தில் வரும் ஹம்மா ஹம்மா பாடல் மூலம் இவர் பிரபலமானார். குஷி, கில்லி, மாஸ்டர் ஆகிய படங்களில் ஹீரோவின் நண்பர் கேரக்டரில் நடித்திருந்தார். ஸ்டார் விஜய்யில் வெளியான மாயா மச்சிந்தராவில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் 1 சீசன் 7 இல் நடித்திருந்தார். அரையிறுதி சுற்றில் எலிமினேட் செய்யப்பட்டார். இவருக்கு நடன பள்ளி இருக்கிறது. அவருடைய தந்தையின் பெயரில் இயங்கி வருகிறது. இவருடைய தாய்மொழி கன்னடம். இவருடைய மனைவி ஹேமா . ஜூன்ஸ், மின்னலே உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் நாகேந்திர பிரசாத்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications