மீண்டும் சிறையில் ஜாபர் சாதிக்.. அமலாக்கத் துறை வழக்கில் காவல் நீட்டிப்பு! நீதிமன்ற அதிரடி உத்தரவு
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான திமுக முன்னாள் பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் சென்னை புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதை பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
மேலும், சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் சுமார் 21 கோடியை சில முக்கிய பிரமுகர்களுக்கு ஜாஃபர் சாதிக் கொடுத்திருக்கிறார் என கூறப்பட்டது. மேலும் இயக்குனரும் நடிகருமான அமீருக்கும் அவர் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தான் பணம் பெறவில்லை சில ஊடகங்கள் தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமீர் கூறியிருந்தார். இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான திமுக முன்னாள் பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது. இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications