தி.க நீட் எதிர்ப்பு மாநாடு.. பெர்மிஷன் கொடுக்குறதுல என்ன பிரச்சனை? காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!
சென்னை: நீட் எதிர்ப்பு மாநாட்டை திருநெல்வேலியில் நடத்த அனுமதி கோரியபோது.. காவல்துறை மறுத்துவிட்டதாக திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. இந்த வழக்கில், தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது.
அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? கோவை பாஜக பேரணி விவகாரத்திலும் இதுதான் நடந்தது. அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்திருக்கிறது.

வழக்கின் விவரம்
நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்திருந்தன. இந்நிலையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி பைக் பேரணி மற்றும் மாநாட்டை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கேட்டிருந்தது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தை திக நாடியிருந்தது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தில் நடத்தவிருந்த பைக் பிரச்சார பயணத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போராட்டம் நடத்தவும் கருத்துரிமை வெளிப்படுத்தவும் குடிமக்களுக்கு உரிமை உண்டு. போராடுபவர்கள் சமூக விரோதிகள் அல்ல என மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து பேரணி நடத்தும் இடம், வழித்தடம் மற்றும் பைக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களை வழங்குமாறு தி.க தரப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது.. அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? என நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
