2 முதல் 18 வயது கொண்டவர்களுக்கான கோவாக்சின் விநியோகம்.. எப்போது தொடங்கும்? வெளியான தகவல்
சென்னை: குழந்தைகளுக்கான கோவாக்சின் வேக்சினுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அடுத்து விரைவில் இந்த வேக்சினுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் வல்லுனர் குழு பரிந்துரையை வைத்துதான் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் பொதுவாக வேக்சினுக்கு அனுமதி வழங்கும். ஏற்கனவே சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான 3 டோஸ் வேக்சினுக்கு அவசர அனுமதி தர வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரை செய்தது.
இதை உடனே இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்தது. இதனால் விரைவில் சைடஸ் கேடில்லா வேக்சின் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்சின்
இந்த நிலையில்தான் குழந்தைகளுக்கான கோவாக்சின் வேக்சினுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கும் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான அனுமதி அளிக்கப்படும், குழந்தைகளிடம் செய்யப்பட்ட சோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எத்தனை வயது
2 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு போடப்படும் கோவாக்சின் ஆகும் இது. உடல் பாதிப்புகள், இதய பாதிப்புகள் கொண்டவர்களுக்கு முதலில் இந்த வேக்சின் கொடுக்கப்படும். அதிகபட்சம் நவம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்த வேக்சின் குழந்தைகளுக்கான பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

வேக்சின்
இந்த வேக்சின் பயன்பாடு குறித்த பரிந்துரையை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதற்கு அனுமதி வழங்குவோம். அதன்பின் மருந்து பயன்பாட்டிற்கு வரும். சில கூடுதல் தகவல்களை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன என்று இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கோவாக்சின் பெரியவர்களுக்கு போடப்படுவது போல 2 டோஸ் வேக்சின் ஆகும்.

2 வயது
2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வேக்சின் போடப்படும். ஒரு டோஸ் வேக்சின் 0.5 மில்லி லிட்டர் இருக்கும். 288 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் வேக்சின்களை போட்டு இருக்க வேண்டும். பெரும்பாலும் நவம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் வேக்சின் குழந்தைகள் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு ஏற்றபடி உற்பத்தி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

உற்பத்தி
அதன்படி கோவாக்சின் உற்பத்தியை மேற்கொள்வார்கள். அந்த கோவாக்சினை பெரியவர்கள், குழந்தைகள் என்று இருவருக்கும் தடை இன்றி கொடுக்கும் வகையில் பிரித்து வைப்பார்கள். பின்னர் போதுமான வேக்சின் கையிருப்பு வந்த பின் குழந்தைகளுக்கான விநியோகம் நவம்பரில் பெரும்பாலும் தொடங்கிவிடும் என்று பாரத் பயோடெக் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications