சென்னை அசோக் நகர் 11வது தெருவில் காய்கறி வாங்கிய 11 பேருக்கு கொரோனா.. தெருவுக்கு சீல்
சென்னை: திடீர் வியாபரிகளிடம் காய்கறி வாங்கிய சென்னை அசோக் நகரின் 11வது தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அசோக் நகர் 11வது தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் புதூரைச் சேர்ந்த 2 பேர் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த நிலையில வறுமையில் தவித்தனர். அவர்கள் பார்த்து வந்த பால்சீலிங் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.

இதற்கிடையே காற்கறிகளை தள்ளுவண்டிகள் வைத்து விற்பதற்கு அனுமதி இருப்பதை பார்த்த அவர்கள் திடீரென காய்கறி வியாபாரிகளாக மாறினார்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இவர்களிடம் காய்கறி வாங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வியாபாரத்தில் ஈடுபட்ட 2 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களிடம் காய்கறி வாங்கிய நபர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
இதில் அசோக் நகர் 11வது தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 11 பேரையம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அத்துடன் 11 பேரின் குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருக்க அவர்கள் வசித்து வந்த 11வது தெரு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாதபடி மூடி சீல் வைத்தனர்.
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் தான் சென்னையிலேயே அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் 9 பேருக்கும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 6 பருக்கும் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications