ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி - ஆறுதல் சொன்ன கீதாஞ்சலி
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
நாடு முழுவதும் கொரோனா, ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது, கடந்த ஒரு வார காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. நேற்றைய தினம் 16 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிக்கு கொரோனா பாதிப்பு
இந்தமுறை அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திரிஷா, சத்யராஜ், மீனா,வடிவேலு ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா இன்ஸ்டா பதிவு
இதுகுறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், 'தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பாக இருங்கள்
தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் இந்த வருஷம் இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப்போகுதுனு பார்ப்போம் என்று கூறியுள்ளார். கணவர் தனுஷ் உடனான விவாகரத்து முடிவுக்கு பின் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா, அதிலிருந்து மீள ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

கீதாஞ்சலி ஆறுதல்
ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்டாகிராமில் நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் மனைவியும் ஐஸ்வர்யாவின் ஓரகத்தியுமான கீதாஞ்சலி, "Get well soon love" என ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications