தமிழ்நாட்டில் படுவேகமாக குறையும் கொரோனா..15,000-க்கு கீழ் சென்ற தொற்று.. சென்னை, கோவையில் எத்தனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எந்த அளவுக்கு வேகமாக சென்றதோ, அந்த அளவுக்கு குறைந்து வருகிறது.

இதேபோல் உயிரிழப்பும் குறைந்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 4 பேர் இறந்துள்ளனர்.

வேகமாக குறையும் கொரோனா

வேகமாக குறையும் கொரோனா

ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 15,000-க்கும் கீழே கொரோனா வந்துள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 33,75,329 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பும் தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது.

 உயிரிழப்பும் குறைவு

உயிரிழப்பும் குறைவு

சென்னையில் அதிகபட்சமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஆறுதலை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கோவையில் 3 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் 4 பேர் இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 37,636 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 24,576 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 31,59,694 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

1,77,999 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்களும் குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1,23,066 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 6,09,25,013 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 2054 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் 1198 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கோவையின் நிலை என்ன?

கோவையின் நிலை என்ன?

கோவையில் 1696 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 389 பேருக்கும், மதுரையில் 231 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 562 பேருக்கும், திருவள்ளூரில் 481 பேருக்கும், திருச்சியில் 347 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1159 பேருக்கும், ஈரோட்டில் 813 பேருக்கும், சேலத்தில் 716 பேருக்கும், நாமக்கல்லில் 394 பேருக்கும், தஞ்சாவூரில் 336 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 66 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 410 பேருக்கும், தூத்துக்குடியில் 127 பேருக்கும், நெல்லையில் 295 பேருக்கும், விருதுநகரில் 130 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+