காவு வாங்கும் கொரோனா.. வெளியே வராதீங்க! கர்ப்பிணிகளுக்கு பறந்த எச்சரிக்கை! நாட்டு மருந்து வந்தாச்சா?
சென்னை: இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் சிலருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனவும், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக தங்கள் உயிர்களை இழந்தனர்.
தொடர்ந்து உயர்தர மருத்துவம், தடுப்பூசி ஆகியவற்றின் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இடையில் கொரோனா வைரஸ் மாறுபாடு அடைந்து புதிய வேரியண்டுகளாக மக்களிடையே பரவியது. இருந்தும், சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக எந்தவித தகவலும் உலகளாவிய அளவில் வரவில்லை.

இந்த நிலையில் திடீர் சிக்கலாக ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் உருவாகியுள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பரவி வருவதால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. JN.1 எனப்படும் ஒமைக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவுவதால் மருத்துவ உலகம் அதிர்ச்சியில் உள்ளது.
இதேபோல இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா என பல மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் படி 6ஆம் தேதியான இன்று சுமார் 5364 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பலியான நிலையில், அவர்கள் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் என தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். 35 வயதான தியாகராஜன் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக முந்தையம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்த நிலையில் சிகிச்சை பழனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பயப்படக்கூடிய அளவு கொரோனா தாக்கம் இல்லை என்றாலும், கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதிக காய்ச்சல் இருமல் உடல் வலி போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைக்கு தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம் இல்லை என்றாலும் தங்கள் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது நல்லது என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாட்டு மருந்துகள் இருப்பதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications