தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,842 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மாநிலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 88 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 20,458 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இன்று ஒரே நாளில் 1,842 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 33 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications