தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. திண்டுக்கல்லில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இன்று 81 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், தஞ்சையில் 4 பேருக்கும், தென் காசியில் 3 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், ராமநாதபுரம் 2 பேருக்கும், கடலூரில் ஒருவருக்கும், நாகப்பட்டினத்தில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 126 பேர்
சென்னையில் 210 பேருக்கும், கோவை மாவட்டத்தில், 126 பேருக்கும், திருப்பூரில் 78பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கும், நெல்லையில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 43 பேருக்கும், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் 33 பேர்
தேனி மாவட்டத்தில் 41 பேருக்கும் கரூர் மாவட்டத்தில் 40 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 41 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 31 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 28, கடலூர் 20, சேலத்தில் 18 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் 17 பேர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டங்களில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கும் இன்று மாலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் 8 பேர்
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications