கொரோனாவில் இருந்து மீண்டார் கனிமொழி - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கனிமொழி எம்.பி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட கனிமொழி எம்.பி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கனிமொழி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கும் கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனிமொழி விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்து கூறியிருந்தனர்.

தான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார் கனிமொழி. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடைபெற்ற நிலையில் கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்த கனிமொழி வாக்களித்து தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.

வாக்களிக்க வாய்ப்பளித்த தேர்தல் ஆணையத்திற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கனிமொழி குணமடைந்து விட்டார் என்றும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டாலும் அடுத்த 5 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள கனிமொழிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications