தமிழ்நாட்டில் வேகமாக குறையும் கொரோனா பாதிப்பு.. இந்த 3 மாவட்ட மக்கள் மட்டும் கவனமா இருக்கனும்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கோவையிலும் அதிவேகமாக குறைந்து வருகிறது.

தொடர்ந்து குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அதன்பின்னர் இடையில் கொரோனா சற்று ஏற்றம், இறக்கமாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும்.

உயிரிழப்பும் குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 26,68,495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். தர்மபுரியில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். இது தவிர செங்கல்பட்டில் 2 பேரும், நாககபட்டினத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,650 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,582 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,15,873 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

கோவையில் வேகமாக குறைவு
16,972 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,49,883 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,65,39,642 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 184 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

தஞ்சாவூரில் அதிகம்
கோவையில் 158 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும், மதுரையில் 33 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 25 பேருக்கும், திருவள்ளூரில் 62 பேருக்கும், திருச்சியில் 51 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 76 பேருக்கும், விருதுநகரில் 16 பேருக்கும், ஈரோட்டில் 91 பேருக்கும், சேலத்தில் 53 பேருக்கும், நாமக்கல்லில் 51 பேருக்கும், தஞ்சாவூரில் 93 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையின் புறநகரில் செங்கல்பட்டை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா குறைந்து விட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications