என்னாச்சு.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் தொற்று உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா குறைந்தாலும் கோவையில் கொரோனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அதிகம் எங்கே?

உயிரிழப்பு அதிகம் எங்கே?

இதனால் மொத்த பாதிப்பு 26,30,592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,119 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,523 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,79,169 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

கோவை தொடர்ந்து முதலிடம்

கோவை தொடர்ந்து முதலிடம்

16,304 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,57,689 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,30,08,711 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 174 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றை விட பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அதே வேளையில் கோவை தொடந்து முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூரிலும் கொரோனா உச்சம் தொட்டுள்ளது.

தஞ்சாவூரில் அதிகம்

தஞ்சாவூரில் அதிகம்

கோவையில் 235 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 133 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 28 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 26 பேருக்கும், திருவள்ளூரில் 61 பேருக்கும், திருச்சியில் 45 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 113 பேருக்கும், விருதுநகரில் 8 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், சேலத்தில் 54 பேருக்கும், நாமக்கல்லில் 53 பேருக்கும், தஞ்சாவூரில் 87 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்

5 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. தஞ்சாவூர், திருவள்ளுர், நாமக்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது, அதே வேளையில் 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+