தமிழகத்தில் சரியும் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் குறைவு.. 2 மாவட்டங்களில் பாதிப்பு சதம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

வேகமாக குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 27,18,750 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
கொரோனாவுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். கோவையில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒருவர் இறந்தார். இதுவரை கொரோனாவுக்கு 36,349 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 884 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,73,448 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை தொடர்ந்து டாப்
8,953 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,02,088 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,22,26,976 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

2 மாவட்டங்களில் சதம்
கோவையில் 119 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 59 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 12 பேருக்கும், திருவள்ளூரில் 24 பேருக்கும், திருச்சியில் 30 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 50 பேருக்கும், ஈரோட்டில் 74 பேருக்கும், சேலத்தில் 42 பேருக்கும், நாமக்கல்லில் 40 பேருக்கும், தஞ்சாவூரில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications