29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கிடுகிடு.. முழு லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னையில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 1392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,937 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 182 பேர், திருவள்ளூரில் 105 பேர், காஞ்சிபுரத்தில் 33 பேர், ராணிப்பேட்டையில் 24 பேரும், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலையில் 23 பேருக்கும், மதுரையில் 10 பேரும், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் 7 பேரும், தருமபுரி, திண்டுக்கல்லில் தலா 3 பேரும், தேனியில் 9 பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் 5 பேரும், கிருஷ்ணகிரியில் ஒருவரும், நாகப்பட்டினத்தில் 4 பேரும், நாமக்கல்லில் 2 பேரும், புதுக்கோட்டையில் 5 பேரும், ராமநாதபுரத்தில் 6 பேரும், சேலத்தில் ஒருவரும், சிவகங்கை மற்றும் தஞ்சாவூரில் தலா 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் 12 பேரும், விருதுநகரில் 5 பேரும் திருநெல்வேலியில் 6 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 36,841 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 10ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறியில் சிகிச்சை பெறுபவர்கள் விவரம்.
- அரியலூர் 384 (23)
- செங்கல்பட்டு 2328 (1412)
- சென்னை 25,937 (13,085)
- கோவை 167 (18)
- கடலூர் 498 (42)
- தர்மபுரி 23 (15)
- திண்டுக்கல் 185 (43)
- ஈரோடு 74 (3)
- கள்ளக்குறிச்சி 299 (61)
- காஞ்சிபுரம் 600 (235)
- கன்னியாகுமரி 105 (40)
- கரூர் 87 (7)
- கிருஷ்ணகிரி 38 (17)
- மதுரை 343 (99)
- நாகப்பட்டினம் 92 (41)
- நாமக்கல் 89 (11)
- நீலகிரி 14 (0)
- பெரம்பலூர் 144 (3)
- புதுக்கோட்டை 45 (19)
- ராமநாதபுரம் 126 (52)
- ராணிப்பேட்டை 164 (68)
- சேலம் 213 (40)
- சிவகங்கை 44 (9)
- தென்காசி 106 (18)
- தஞ்சாவூர் 127 (37)
- தேனி 134 (27)
- திருப்பத்தூர் 42 (11)
- திருவள்ளூர் 1581 (771)
- திருவண்ணாமலை 548 (220)
- திருவாரூர் 83 (38)
- தூத்துக்குடி 389 (161)
- திருநெல்வேலி 407 (54)
- திருப்பூர் 114 (0)
- திருச்சி 132 (26)
- வேலூர் 122 (76)
- விழுப்புரம் 392 (60)
- விருதுநகர் 159 (35)
- விமான நிலைய கண்காணிப்பில்: 152 (89)
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பில் 60 (36)
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 294 (177)












Click it and Unblock the Notifications