தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. திடீரென குறைந்த பரிசோதனை.. ஆனாலும் ஆறுதலான சூப்பர் விஷயம்
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பிசிஆர் பரிசோதனை கடந்த சில நாட்களில் இல்லாத அளவிற்கு இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமையான இன்று ஒரே நாளில் 11584 பேருக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 12962 தனிநபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை (மே 9) அன்று 12999 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் இன்று 11584 பேருக்கு கொரோனாவை கண்டுபிடிக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு அதிக அளவு வெளியே தெரிய காரணம், நாட்டிலேயே மிக அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை இங்கு தான் செய்யப்பட்டு வருகிறது.

243 952 தனிநபர்களுக்கு டெஸ்ட்
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 243 952 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தான் 8002 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 8002 பேரில் 2579 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போதைய நிலையில் 5985 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

13 ஆயிரத்தை தாண்டிதான்
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவு உயர்ந்து வரும் நிலையில் சோதனையின் அளவு இன்று திடீரென குறைந்துள்ளது. கடந்த கடந்த 8ம் தேதி அன்று 13833 பேருக்கு 13980 சாம்பிள்கள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் 600 பேருக்கு தொற்று உறுதியானது. இதேபோல் சனிக்கிழமை மே 9ம் தேதி நிலவரப்படி 12999 பேருக்கு 13254 சாம்பிள்கள் எடுத்து பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 526 பேருக்கு தொற்று உறுதியானது.

சுகாதாரத்துறை அறிக்கை
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (மே 10) 12967 பேருக்கு 13367 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக நேற்று மாலை நிலவரப்படி 232368 பேருக்கு 243037 சாம்பிள்கள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இதன்படி 7204 பேருக்கு கொரோனா தொற்று மே 10ம் தேதி மாலை நிலவரப்படி உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நான்கு நாட்களில் குறைவு
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களை ஒப்பிடும் போது மிகக்குறைவாக 11 584 பேருக்கு 11862 சாம்பிள்கள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 8002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் அதிகபட்சமான பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில் இனறு சென்னையில் மட்டும் 538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4371 பேர் இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று எப்படி வந்தது
கொரோனா தொற்று மிகமிக அதிகவேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்றைக்குத்தான் பிசிஆர் பரிசோதனைகள் மிகவும் குறைந்துள்ளது. தொடர்பு தடமறிதல் மூலம் அனைவரையும் தேடி கண்டுபிடித்து சோதனை செய்து வரும் தமிழக சுகாதாரத்துறை இதுவரை இல்லாத அளவாக 798 பேருக்கு இன்று கொரோனா தொற்றை கண்டுபிடித்துள்ளது. இதன் முக்கியமான விஷயம் அனைவருக்கும் எப்படி வந்தது என்பதையும் சேர்த்தே கண்டுபிடித்துள்ளது. இந்த லிஸ்டில் ஒருவருக்கு கூட கொரோனா எப்படி பரவியது என்று தெரியாத நிலை இல்லை, அந்த வகையில் இது ஆறுதலான விஷயம். அதேநேரம் கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில் சோதனைகள் குறைந்து இருப்பதும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ஆகும். வரும் நாட்களில் மீண்டும் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications