Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 442 பேர் பாதிப்பு - 453 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 442பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 453 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,49,166 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 453 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,32,620 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: கொரோனாவிலிருந்து மீண்ட 453 பேர்!
    Covid 19 Update Tamil Nadu: 442 people were affected by the corona today

    தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 442 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,49,166 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 255 பேர் ஆண்கள், 187 பேர் பெண்கள்.

    கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 453 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,32,620 ஆக உயர்ந்துள்ளது .தமிழகத்தில் தற்போது 4, 091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் மட்டும் 148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 66வது நாளாக தமிழ்நாட்டில் 1000 பேருக்கு கீழே கொரோனா தொற்று பரவியுள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+