போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் - அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்று அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார். போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ தடுப்பூசி போடப்படும் என்று சென்னையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் இன்று ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனாவை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்று கூறினார்.

Covid-19 Vaccine Dry Run : Dr Harsh Vardhan addresses the media at Govt General Hospital

நாடுமுழுவதும் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 2ம் கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சதவிகிதம் அதிரிகரித்துள்ளது. நாட்டில் 2300 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது முதல் முழுவீச்சில் மத்திய அரசு பணிகளை தொடங்கியது.

முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் . இதனைத் தொடர்ந்து குறுகிய நாட்கள் இடைவெளியில் இந்தியா கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டது என்றும் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+