குட் நியூஸ்... கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்.. டெஸ்ட்டுகளும் கிடுகிடு உயர்வு..!
தமிழகத்தில் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது
சென்னை: செம.. ரொம்ப நாளைக்கு பிறகு தமிழகத்தில் 2 நல்ல செய்தி நமக்கு ஆறுதல் தந்துள்ளது.. ஒன்று, தமிழகத்தில் இன்று மட்டும் 2,325 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர்.. மற்றொன்று தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இன்றும் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்தபடியே உள்ளது.. இப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இதை தவிர, 3,943 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்தமாக பாதிப்பு 90,167 ஆக உள்ளது... அதேசமயம், 60 பேர் இன்று உயிரிழந்தள்ளனர்.. எனினும், பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், குணமாவதும் அதிகரித்து வருகிறது.. இதுவரை 50,074 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. இன்று மட்டும் 2,325 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது நிம்மதி தருகிறது.
அதேபோல, தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் டெஸ்ட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் 30,053 பேருக்கும், டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 30,242 சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் 90 மையங்களில் இந்த கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 38,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 11,70,683 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே நம் மாநிலத்தில்தான் டெஸ்ட் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு நாளும் கொரோனாவைரஸ் நமக்கு பீதியை தந்து வந்தாலும், குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.53% ஆக உள்ளது ஒரு வகையில் நிம்மதியை தருகிறது.. இந்த விகிதம் 100 ஆக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications