தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுககு கொரோனா டெஸ்ட் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
ஏர்போர்ட்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டிலிருந்தும் தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா டெஸ்ட் கட்டாயம் செய்யப்படும் என்று தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், பிரிட்டனில், இன்னொரு வைரஸ் ஆரம்பமாகி உள்ளதாம்.. அந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்தும் வருவதாக சொல்லப்படுகிறது.

பழைய கொரோனா வைரஸை விட மிகவும் வேகமாக இது பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது... இதனால், உலக நாடுகளே அதிக அளவு கலக்கத்தில் உள்ளன.. இதையொட்டி பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன..
இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வரும் அனைத்து நாட்டு பயணிகளுக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்படும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஏர்போர்ட்டில் நேரடியாக ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அவர் சொன்னதாவது: "தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா டெஸ்ட் கட்டாயம் பின்பற்றப்படும்.. கொரோனா தொற்று இருந்தால் ஆஸ்பத்திரிகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.. கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு, கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்." என்றார்.
இதே போல, கர்நாடக அரசும் பெங்களூரு, மற்றும் மங்களூரு விமான நிலையம் வழியாக இங்கிலாந்தில் டிசம்பர் 7-ம் தேதி முதல் இருந்து நாடு திரும்பியவர்களின் லிஸ்ட்டை பெற்று டெஸ்ட் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications