மாநில அரசுகளை கலைக்கும் 356-வது பிரிவு நீக்கம்..திமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராக சிபிஎம் வாக்குறுதி!
சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஆனால் திமுக கூட்டணி கட்சியான சிபிஎம், 356-வது பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது விவாதங்களாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு, எமர்ஜென்சியை எதிர்த்த போது ஈழத் தமிழரை ஆதரித்த போதும் 356-வது பிரிவின் கீழ் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. மத்தியில் ஆளும் அரசானது நினைத்த நேரத்தில் மாநில அரசுகளைக் கலைக்கக் கூடிய ஆயுதமாகவே 356-வது பிரிவு இருந்து வந்தது.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகளால்தான் அண்மை காலமாக 356-வது பிரிவு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இருப்பினும் மாநில அரசுகளை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்காக முன்வைக்கின்றன. இதனால் மாநில அரசுகளுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே 356-வது பிரிவு இருந்து வருகிறது.
அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு அறவே நீக்கப்பட வேண்டும்- ரத்து செய்யப்பட வேண்டும் என்பது திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பொதுவான கருத்து. தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் 356-வது பிரிவை நீக்க வேண்டும் என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன.
ஆனால் தமிழ்நாட்டின் சிபிஎம் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, அதன் கூட்டணி கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு முரண்பாடாக உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ அகற்றிட திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிபிஎம் கட்சியின் தேர்தல் அறிக்கையிலோ, பிரிவு 356 ஐ பொருத்தமான ஏற்பாட்டைக் கொண்டு மாற்றுவது; மேலும் அதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, பிரிவு 355 இல் உரிய திருத்தம் செய்வது என பொத்தாம் பொதுவாக வாக்குறுதி அளித்துள்ளது. அதாவது 356-வது பிரிவை ரத்து செய்யாமல் மாற்றம் செய்வது என்கிற ஒரு நிலைப்பாட்டை சிபிஎம் வாக்குறுதியாக தந்திருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications