தவெக அமைச்சரின் செயல்.. ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரானது! கொந்தளித்த கம்யூனிஸ்ட் கட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாண் பட்ஜெட் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து அமைச்சர் ஆர்.வினோத் சிறப்பு வழிபாடு செய்ததற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் இதற்கு முன்னர் அமைச்சர்கள் பலர் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கின்றனர். ஆனால் யாரும், பட்ஜெட் நகலை தூக்கிக்கொண்டு திருப்பதி கோயிலுக்கு போனதில்லை. அந்த வகையில், தவெக அமைச்சரின் செயல்பாட்டை கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியே கண்டித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

CPI Condemns

சிறப்பு வழிபாடு

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள ,வேளாண் பட்ஜெட் வரைவு நகலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

மதச்சார்பற்ற நாடு

ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ,பல்வேறு மதங்கள், வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் நாத்திகர்களும் உள்ள ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதம்,ஆன்மீகம்,கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்க வேண்டும்.அரசோடு, அரசியலோடு அவற்றை கலகக் கூடாது.

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும். அதை ஒரு குறிப்பிட்ட மதத்தின்,ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வணங்கும் வழிபாட்டுத் தளத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தது நமது அரசியல் சட்டத்திற்கும்,மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் ,பன்மைத்துவத்திற்கும் எதிரானதாகும்.

ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு

மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக அமைச்சர் வினோத் அவர்கள் செயல்பட்டது கண்டனத்திற்குரியது. தவெக அரசும்,அமைச்சர்களும் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு அரசு ஆவணத்தை,அதற்கு முன்பாகவே பொதுவெளியில் வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான,ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கையாகும்.

விவசாயிகளின் கடன்

விவசாயிகளின் ,விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி ஒத்தக்கருத்தை உருவாக்க முயலாத தவெக அரசு, விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசு, வேளாண்மையை ,விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மை பட்ஜெட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளதாக தவெக அரசின் அமைச்சர் கூறுவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

சிபிஎம் எதிர்ப்பு

எனவே, இத்தகையப் போக்குகளை தவெக அமைச்சர்களும்,அரசும் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன், "பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம். தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்." என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+