குமரி ஆனந்தன் மகளே.. பொய் சொல்லக்கூடாது பாப்பா.. தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்!
சென்னை: தமிழிசையும் பிரதமர் மோடி போலவே பொய் பேசுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் கேபினட் அமைச்சர் பதவி குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்தியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழிசை சொல்வதை பொய் என நிரூபித்தால் தமிழிசையும் மோடியும் அரசியலை விட்டு ஓடுவார்களா என ஸ்டாலின் சவால் விட்டார்.

நிரூபிப்பேன்
இதைத்தொடர்ந்து ஸ்டாலின் பாஜகவுடன் பேசியதும் உண்மைதான் நான் சொல்வதும் உண்மைதான் என்றார் தமிழிசை. அதனை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்பேன் என்றும் கூறினார் தமிழிசை.

2 ஆண்டுகளாக போராட்டம்
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

கடும் கண்டனம்
தமிழிசை கூறும் குற்றச்சாட்டு திமுக தலைமை மீதானது மட்டும் அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி மீதே தமிழிசை குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழிசை ஸ்டாலின் மீது கூறிய குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது.

தலைவரைப் போல்
பொய்கள் பாஜகவின் மூலதனமாகிவிட்டது. பிரதமர் மோடி பொய்களை கூறியே அரசியல் நடத்தி வருகிறார். தங்கள் தலைவர் மோடியை போலவே தமிழிசையும் பொய் பேசி வருகிறார்.

பொய் சொல்லக்கூடாது பாப்பா
மரியாதைக்குரிய குமரி ஆனந்தன் அவர்களின் மகளே, பாரதியார் பாடல் ஒன்று உள்ளது, பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று. அந்த பாடல் பாப்பாவுக்குதான் எனக்கில்லை என தமிழிசை பொய்களை அடுக்கி வருகிறார். தமிழிசை உண்மையை பேச வேண்டும்.

ஜனநாயகத்திற்கு விரோதமானது
கோட்சேவுக்கு ஆதரவாக அமைச்சரும் பாஜகவினரும் பேசி வருவது வியப்பாக உள்ளது. கமல் பிரச்சாரத்திற்கு தடை கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications