“வரலாற்றைப் படிங்க மிஸ்டர் விஜய்..” தவெக தலைவர் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் சண்முகம் பதிலடி!
சென்னை: "மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நேற்று அரியலூரில் பிரச்சாரத்தின்போது பேசியதற்கு சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். அப்போது முதல் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், 2026ல் தவெக தான் ஆட்சிக்கு வரும் என்று பேசி வருகிறார். அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையில்தான் போட்டி என்றும் அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் விஜய் திருச்சியில் நேற்று தனது பரப்புரையைத் தொடங்கினார். திருச்சி மரக்கடையில் பரப்புரை செய்த அவர், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதன்பிறகு அரியலூர் சென்ற விஜய், மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, "இங்கு கூடியுள்ள மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும் வசதியையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம். உங்களது அன்பு, பாசத்தை விட உலகில் எனக்கு எதுவுமே பெரிதில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக, உறவினராக என்னை மாற்றிவிட்டீர்கள். என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்கு பணத்தைப் பார்த்துட்டேன். அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்கு கொஞ்சம் கூட அவசியமில்லை. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேலையும் எனக்கு இல்லை." எனப் பேசினார் விஜய்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பேச்சைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் எனத் தெரிவித்துள்ளார் பெ.சண்முகம்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக தலைவர் விஜய் 'அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதல்வராக இருந்த இ.எம்.எஸ், ஜோதி பாசு, நிரூபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், இ.கே. நாயனார், மாணிக் சர்க்கார், புத்ததேவ் பட்டாச்சாரியா, வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.
பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் இ.எம்.எஸ், பி.சுந்தரைய்யா, ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்ட்களின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல. வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது?












Click it and Unblock the Notifications