அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார் ஸ்டாலின்... சீதாராம் யெச்சூரி பெருமிதம்..!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்த காணொலி வாயிலான சிறப்பு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

மேலும், அரசியலில் மு.க.ஸ்டாலினுக்கு பல புதிய சவால்கள் காத்திருப்பதாகவும் அனைத்து சவால்களிலும் அவர் வெற்றிபெறுவார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும் தேர்தல் போரில் ஸ்டாலின் நிச்சயம் வெல்வார் எனவும் யெச்சூரி தெரிவித்தார்.
மேலும், மறைந்த கருணாநிதியுடன் தனக்கிருந்த நட்பு குறித்து பேசிய யெச்சூரி, அவரது மறைவுக்கு பிறகு கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காக அனைவரையும் ஸ்டாலின் ஒன்றிணைத்து செயல்பட்டு வருவதாக சீதாராம் யெச்சூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலம் நல்ல காலமாக அமைய வேண்டியும், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் ஸ்டாலினை மீண்டும் ஒருமுறை வாழ்த்தி தனது வாழ்துரையை முடித்துக் கொள்வதாக சீதாராம் யெச்சூரி தெரிவித்திருக்கிறார்.
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications