மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என். சங்கரய்யாவுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி
மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்ட சங்கரய்யா, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பானது, இப்போது வேகம் எடுத்து வருகிறது.. நேற்று 8,981 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,978 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது..
இன்று மாநிலம் முழுவதும் கொரோனா காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.. தமிழ்நாட்டில் இன்று 1525 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.. இப்போதைதக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 40260 ஆக உயர்ந்துள்ளது..

ஊரடங்கு
பல்வேறு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வந்தாலும், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு டபுள் மடங்காக அதிகரித்துள்ளது... தமிழக அரசு இரவு ஊரடங்கு,. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. எனினும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து தொற்றால் பாக்கப்பட்டு வருகின்றனர்.

தொற்று உறுதி
அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. கடந்த ஜூலை மாதம்தான், என்.சங்கரய்யா தன்னுடைய 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்..

நிவாரணம்
100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், கடந்தாண்டுக்கான தகைசால் தமிழர் அவருக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது... எனினும், தகைசால் தமிழர் விருதுக்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று என். சங்கரய்யா அறிவித்து விட்டார்.

தீவிர சிகிச்சை
எளிமையின் சின்னமாக, இந்திய அரசியலில் மூத்த தலைவராக வலம் வரும் என்.சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.. நூறு வயதை அடையும் நிலையிலும் என்.சங்கரய்யா இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்... தற்போது சென்னையில் கொரோனாவைரஸ் அதிகரித்து வரும் நிலையில், சங்கரய்யாவுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications