காவிரி கூட்டம் நடத்தாததால் தொகுதி மறுவரையறை கூட்டம் நடத்தக்கூடாது என்பதா? கடுகடுத்த சிபிஎம் சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எம்பிக்கள் கூட்டம் நடத்திய நிலையில் இது குறித்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம், "காவிரி, மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்றால் நாளையோ நாளை மறுநாளோ நடத்தட்டும். அதை கூட்டாததனால் இதை கூட்டக்கூடாதுஎன்று சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?" என கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை செய்ய மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்கிறது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவால், தமிழக லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், கூடிய விரைவில் அதுதொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

CPM Shanmugam Irked Does Failure to Convene a Cauvery Meeting Mean the Delimitation Meeting Shouldn t Be Held

தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டுவதாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டவில்லை என்று அக்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது பற்றியும் திசை திருப்புவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டதா? என்பது குறித்த கேள்விகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பதிலளித்துள்ளார்.

பெ சண்முகம் பேச்சு

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காவிரி மேகதாது என்பது மிக முக்கியமன பிரச்சினைதான். அதில் யாருக்கும் எந்த விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக என பல கட்சிகளும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கு இடையில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என்கிற முறையில், பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்றுகிறவிதமாக ஒரு முயற்சி நடைபெறுகிறது.

இதே விவகாரத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில்தான் நமக்கு 39 தொகுதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த நிலை தொடர வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானம் என்பது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. புதிய அரசு வந்து இருக்கிறது. அவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுகிற பொழுது, அது சம்மந்தமாக தமிழ்நாட்டில் ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கூட்டம் இது. அதில் திமுக கலந்து கொண்டு இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

முன் முயற்சி செய்ததே திமுக தான்

திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது ஏற்கனவே அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அவர்கள் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக இப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. திமுக ஏற்கனவே, கடந்த ஆண்டு இந்த பிரச்சினை வந்த போது, நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு உரிய பிரதிநித்து விகிதம் குறையக் கூடாது என்பதில்தான் அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துகளோடு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதற்கான முன்முயற்சி எடுத்தது திமுக.

எனவே அதில் இருந்து மாறுபடுகிறார்கள் என்பதற்கான எந்த வித அறிகுறிகளும் கிடையாது. இந்தக் கூட்டத்திலே ஏன் கலந்து கொள்ளவில்லை என்று சொன்ன போதும் எங்கள் நிலைப்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை என்றுதான் கனிமொழி கூறியுள்ளார். எனவே திமுக நிலைப்பாடு தெரிந்து கொள்வதற்காக அவ்வளவு பெரிய முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது பாஜகவின் தொடர் முயற்சி.

ஏதாவது அர்த்தம் இருக்கா?

அதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கட்சிகளை உடைத்து தங்களுக்கு ஆதரவாக எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு தீவிரமான முயற்சியில் பாஜக இருக்கும் போது, தமிழ்நாட்டில் ஒற்றுமைப்படுத்துவது என்ற முறையில் எடுக்கும் முயற்சியை குற்றமாக பார்க்க முடியாது. மூன்றில் இரண்டு பங்கு என தங்கள் பலத்தை பெருக்கி கொள்ள எல்லாவிதமான தந்திரங்களிலும் பாஜக ஈடுபட்டு கொண்டு இருப்பது பற்றி நாடே விவாதித்துக் கொண்டு இருக்கிறது.

அத்தகைய புதிய சூழலில்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒருமித்த கருத்தோடு நிறுத்த வேண்டும் என்பதற்கான நல்ல முயற்சி இது. அதில் குற்றம் காண எதுவும் இல்லை. காவிரி, மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்றால் நாளையோ நாளை மறுநாளோ நடத்தட்டும். அதை கூட்டாததனால் இதை கூட்டக்கூடாது என்று சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கா? " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+