தங்கய்யா.. சங்கரய்யா.. அந்த அழுக்கு மூட்டைக்கு நடுவே "சிவப்பு சூரியன்".. தோழரின் கடைசி ஆசையை பாருங்க
சென்னை: எவ்வளவு கொள்கை முரண்பாடு இருந்தாலும் சரி, மாற்று கட்சியினருடனும், அதன் தலைவர்களுடனும் மனிதாபிமான நட்பு பாராட்டியதாலேயே, இன்றுவரை மக்கள் மனங்களில் நிறைந்து வீற்றிருக்கிறார் மூத்த தலைவர் சங்கரய்யா.
ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், வலிய வந்து வறுமையை ஏற்றுக்கொண்ட கனிந்த மனதுக்கு சொந்தக்காரர்.. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைவாசத்தில் கழித்த எளிமைவாதி.

சுயமரியாதை: எந்தவிதமான வசதிக்கும், பதவிக்கும், வாய்ப்புக்கும் ஆசைப்படாமல், சுயநல மறுப்போடு இந்திய சுதந்திரத்திற்காகவும், தமிழர்களின் சுய மரியாதைக்காகவும், சமூக சீர்திருத்தங்களுக்காகவும், தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும், விவசாயிகளின் உயர்வுக்காகவும், தொழிலாளர்களின் வாழ்வுக்காகவும், தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் சங்கரய்யா.
இவரது தாத்தா பெயர்தான் சங்கரய்யா.. இவரது பெயர் பிரதாப சந்திரன்.. ஆனால், தாத்தா பெயர்தான் தனக்கும் வேண்டும் என்று வீட்டில் அடம்பிடித்ததுடன், ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் அதில் வெற்றியும் பெற்றவர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் மூலையில், போராட்டம் என்ற வார்த்தை எங்கு ஒலித்தாலும் சரி, அங்கே முதல்நபராக நின்றுவிடுவார் சங்கரய்யா.
மிரட்டல்கள்: இந்த போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும், துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும், துணிச்சலுடன், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றவர்.. 8 வருஷம் ஜெயில் தண்டனையும் இனிதாக ஏற்றவர்.. 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கையையும் எளிதாக கடந்தவர்..
தன் மகனை வக்கீலாக்கி பார்க்க வேண்டும் என்ற அப்பாவின் ஆசைகளை, உழைக்கும் வர்க்கத்துக்காக தூக்கி எறிந்தவர்.. அடக்குமுறைகளுக்கும், இன்னல்களுக்கும் நேரடியாக ஆளானதால்தான், சலவை தொழிலாளி வீட்டின், அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்த நிலைமைக்கும் ஆளானார் சங்கரய்யா.. பதுங்கியிருந்த நேரத்தில், வாட்டி எடுத்த தோல் நோய்க்குகூட, சிகிச்சை பெற முடியாத அவலத்துக்கும் ஆளானார்.
இளைஞர்கள் கூட்டம்: சங்கரய்யா கூட்டங்களில் பேச போகிறார் என்றாலே, மொத்த இளைஞர்களும் திரண்டு வந்துவிடுவார்களாம்.. இவர் பேச பேச, இளைஞர் கூட்டத்துக்கும் நரம்புகள் புடைக்குமாம்..
பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால், சங்கரய்யாவிடம் ஏற்பாடு பொறுப்பை தருவார்கள்.. காரணம், கணீர் குரலில் கட்சியின் கொள்கைகளை பாடி, பாடியே ஆயிரக்கணக்கில் கூட்டத்தை திரட்டி விடுவாராம். இத்தனைக்கும், கையில் எந்த குறிப்பும் இருக்காது.. மணிக்கணக்கில் பேசி, சொல்ல வந்த விஷயத்தை, ஆணித்தரமாக விதைத்துவிடுவதில் வல்லவர்.
சாதி மறுப்பு திருமணம்: "குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு வரலாம்.. விரோதம் வரலாம்.. ஆனாலும் சாதி மதம் பார்க்காமல் உங்கள் வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று மேடைக்கு மேடை வலியுறுத்தியவர்.
மொத்தம் 11 வருடங்கள் எம்எல்ஏவாக தன் கடமையை செய்தவர்.. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் "ஜனசக்தி"யின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்தவர்... பிறகு தீக்கதிர் நாளிதழ் தொடங்கப்பட்டபோது, நெருப்பு எழுத்துக்களில் பல கட்டுரைகளை எழுதினார்.. இறுதியில், அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
உருவாக்கம்: அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கம், மதுரை மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம், கட்சிக் கிளைகள், மாவட்ட, மாநில, மத்திய குழு என்று திறம்பட செயல்பட்டு, அதில் அக்கறையை அளவில்லாமல் கொட்டியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், மத்தியக்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக தலைவர், அனைத்திந்திய நிர்வாகி போன்ற பொறுப்புகளில் சங்கரய்யாவின் உழைப்பும், அர்ப்பணிப்பும் முழம் போட்டு அளவிட முடியாதவை.
உழைக்கும் வர்க்கத்தின்மீது இவர் காட்டிய பாசம்தான், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியை இவரிடம் சாய்க்க வைத்தது.. அதிலும், கலைஞர் மீது தனிப்பட்ட பாசம் சங்கரய்யாவுக்கு உண்டு. கலைஞரைவிட, சங்கரய்யா 3 வயது மூத்தவர் என்றாலும், இவர்களது நட்பு விசித்திரமானது - அதேசமயம் ஆழமானது.. கூட்டணியையும் தாண்டி, வானமே எல்லையாய் விரிந்து கிடந்தது..
கலைஞர்: சட்டமன்றத்தில் சங்கரய்யா, புள்ளிவிவரங்களுடன் பேச ஆரம்பித்தாலே, கலைஞர் வியந்து பார்ப்பாராம்.. கருணாநிதி அமைச்சராக இருந்தபோதிருந்தே, சங்கரய்யாவின் பல கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்.. முதல்வரான பிறகு, சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களை கொண்டுவந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரய்யாதான் என்பதையும் மறுக்க முடியாது
சங்கரய்யாவுக்கும் ஒரு ஆசை இருக்கத்தான் செய்தது.. இதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.. "எனக்கு ஒன்னுதான் ஆசை... இன்றைய வகுப்புவாத, பிற்போக்கு சக்தியை எதிர்த்து போராடணும்.. எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் போராடினாங்களோ, அதே போல போராடணும்.. சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் இது முடியாது.. மார்க்ஸ் தான் ஒரே தீர்வு.. வேற வழியேயில்லை" என்ற ஆதங்கத்தை கொட்டினார்.
சமூக வேள்வி: சமூக வேள்வியில் சிக்கி, மீண்டு வர முடியாமல் தகித்து கிடக்கும் மக்களை விடுவிக்க ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விடிவெள்ளிகள் தோன்றுவார்கள்.. அப்படிப்பட்ட விடிவெள்ளிகளில் நமக்கு கிடைத்த ஒருவர்தான் தோழர் சங்கரய்யா..!!
"வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் தொகுப்புதான்" என்கிறார் மார்க்ஸ்.. அப்படி ஒரு வரலாறைதான் என்.சங்கரய்யாவும் வாழ்ந்து முடித்துள்ளார்.. இந்த மண்ணில், மார்க்சிய இயக்கம் மகத்துவம் பெறும் என்றால், அது சங்கரய்யா போன்ற தோழர்களின், ரத்தத்தாலும், சதையாலும், நாடி நரம்பாலும் என்பதில் சந்தேகமே இல்லை..!
போய் வாருங்கள் தோழர்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications