சீமான் ஒரு 'ரேப் அக்யூஸ்டு'- சிபிஎம் உ.வாசுகிக்கு நாதக பதிலடி!சிஐடியூ வரதராஜன் தற்கொலை பின்னணி என்ன?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பலாத்காரம் குறித்து கிண்டலாக பேசியதுடன் நடிகையை பலாத்காரம் செய்தது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்ததற்கு சிபிஎம் மூத்த தலைவர் உ.வாசுகி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது உ.வாசுகியின் விமர்சனத்துக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பலாத்காரம் தொடர்பாக சீமான் கடந்த வெள்ளிக்கிழமையன்று அடுத்தடுத்து நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா பலாத்காரம் செஞ்சுவிட்ட மாதிரி எல்லாரும் கத்திகிட்டு இருக்கீங்க.. என பேசியிருந்தார். அத்துடன், நடிகை விஜயலட்சுமி தம்முடன் பணத்துக்காகவே படுக்கையை பகிர்ந்து கொண்டார்; அவருக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்பட்டது என கூறியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு தற்போது வரை கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சிபிஎம் மூத்த தலைவரான உ.வாசுமி தமது எக்ஸ் பக்கத்தில், ஒரு கட்சியின் தலைவர், ரேப் அக்யூஸ்டு... இத்தனை விசாரணைக்குப் பின்னுமா ரேப் சட்டம் தெரியவில்லை? பாதிக்கப்பட்டவரை (survivor) வேறு நக்கல் செய்கிறார், நாதக உறுப்பினர்கள் இதற்காகவே கூண்டோடு விலக வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல பல்வேறு பெண் தலைவர்களும் சீமானுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
தற்போது நாம் தமிழர் கட்சியினர் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியான பாக்கியராசன் தமது எக்ஸ் பக்கத்தில், தன் மீதான பாலியல் குற்றசாட்டுக்காக தன்னை விசாரிக்காமல் கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற வலியில் போரூர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் பொலிட்பீரோ உறுப்பினர் CITU தலைவர் W.R. வரதராஜன்.
இச்சம்பவம் குறித்து இதுவரை வெளிபடையாக காரணத்தை அறிவிக்காத மானங்கெட்ட மார்க்சிஸ்ட் கட்சியும் அந்த தற்கொலைக்கு காரணமென பேசப்பட்ட வாசுகியும் சீமான் அண்ணனையும் நாம் தமிழர் கட்சியையும் பேச தகுதி இல்லாதவர்கள் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications