Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுவழியில் சிக்கிக்கொண்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற பஸ்.. “மேட்ச்சுக்கு டைம் ஆகுதே” டென்ஷன்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்குச் சென்ற வாகனங்கள், சாந்தோம் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கின. மேட்ச்சுக்கு நேரம் ஆக ஆக பதற்றம் கூடிய நிலையில், ரூட் மாற்றி விடப்பட்டது. இதனால் 20 நிமிடங்கள் தாமதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வீரர்கள் வந்து சேர்ந்தனர். இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

சிஎஸ்கே vs பஞ்சாப் : 16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்ய, தற்போது சிஎஸ்கே அணி பேட்டிங் ஆடி வருகிறது. முன்னதாக, சிஎஸ்கே வீரர்கள் வந்த வாகனம் திடீர் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

csk bus stucked in road near santhom just before the ipl match : stir among players

மீனவர்கள் போராட்டம் : சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்து விடுவதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையோரம் இருந்த மீன் கடைகளையும், மீன் உணவகங்களையும் சென்னை மாநகராட்சி அகற்றியது. இதனை எதிர்த்து மீனவர்கள் நொச்சிக் குப்பம் சாலையில் படகுகளை நிறுத்தி போக்குவரத்தை முடக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீனவர்கள் கடைகளை அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்து நொச்சிக் குப்பம் போராட்ட விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது நீதிமன்றம்.

இன்று திடீர் போராட்டம் : இந்நிலையில், டுமீல் குப்பம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அரசின் அனுமதியின்றி நுழைந்ததாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கலங்கரை விளக்கம் அருகே மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

csk bus stucked in road near santhom just before the ipl match : stir among players

சிஎஸ்கே வீரர்கள் எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அங்கிருந்து சென்னை அணியின் மஞ்சள் நிற பேருந்துகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குக் கிளம்பினர். சாந்தோம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது, மீனவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சென்னை அணியின் வாகனமும் சிக்கியது.

சிக்கிய சிஎஸ்கே மஞ்சள் பஸ் : இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்கும், அதற்கு முன்பாக டாஸ் போடப்பட வேண்டும் என்ற சூழல் நிலவ, போக்குவரத்து நெரிசல் சற்றும் குறையாததால் சிஎஸ்கே அணியினர் பரபரப்படைந்தனர். போலீசாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். 20 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிஎஸ்கே வீரர்கள் பயணித்த வாகனம் சிக்கியது.

நிலைமையை உணர்ந்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை மாற்றி, சென்னை அணி வீரர்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். இதையடுத்து சிஎஸ்கே வீரர்களைச் சுமந்துகொண்டு வாகனம் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வால் சிஎஸ்கே அணியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+