சிஎஸ்கே அணியினர் பாதுகாப்பாக எடுத்து வந்த ‘பாக்ஸ்’.. உள்ளே அதானா? கேப்டன் தோனி இன்னும் வரலையா?
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் உள்ளிட்டோர் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில், ஏராளமான ரசிகர்கள் திரண்டு வரவேற்றுள்ளனர். இன்னும் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னை வரவில்லை என்றபோதும், ஒரு பெட்டி பயங்கர பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மழை காரணமாக ஒரு நாள் கழித்து ரிசர்வ் நாளில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே அணி.

முதலில் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 214 என்ற இமாலய இலக்கை சென்னைக்கு நிர்ணயித்தனர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி, முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தாமதமாகி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
15 ஓவர்களில் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே பந்துகளை வீணாக்காமல் அடித்து ஆடியது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை தேடி தந்தார் ஜடேஜா. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் தோனி கண்கலங்கிய உணர்ச்சிகரமான தருணமும் நிகழ்ந்தது. இந்த மகத்தான வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து, ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை வந்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். அகமதாபாத்தில் இருந்து சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர், சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தனர்.
சென்னைக்கு வருகை தந்த சிஎஸ்கே அணி நிர்வாகத்தினரை, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மஞ்சள் ஜெர்சியுடன் வெற்றி உற்சாகத்துடன் வந்த அணியினரைக் காண ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங், சென்னை அணியின் நிர்வாக அலுவலர்கள் பலர் வந்துள்ள நிலையில், தோனி உள்ளிட்ட அணி வீரர்கள் தற்போது வரை சென்னை வரவில்லை. வீரர்கள் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதால், அவர்கள் தாமதமாக வருவார்கள் என சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

விரைவில் அவர்கள் சென்னை வரவிருப்பதாகத் தெரிகிறது. அதேசமயம், ஒரு பெட்டி மிகுந்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டது. அந்தப் பெட்டியை, சிஎஸ்கே அணியினர் ஒரு காரின் பின்னால் வைத்து கொண்டு சென்றுள்ளனர். அந்தப் பெட்டியை காரின் டிக்கிக்குள் வைத்து மூட முடியாததால் மிகுந்த சிரமப்பட்டு வைத்து கொண்டு சென்றனர். அந்தப் பெட்டிக்குள் இருப்பதுதான் சென்னை அணிக்கு ஐபிஎல் 2023 வழங்கப்பட்ட சாம்பியன் கோப்பை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக் கோப்பை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் சென்னை வந்ததும் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications