இந்த நேரத்தில் போய் ரிஸ்க் எடுக்கலாமா?.. தோனியின் திடீர் முடிவு.. சிஎஸ்கே எதிர்காலத்திற்கே சிக்கல்?
சென்னை: ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி தனது ஓய்வு குறித்து எடுத்து இருக்கும் முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற மாட்டேன் என்று அறிவித்து இருக்கிறார். நான் இந்த வருடம் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். நான் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திடீரென அறிவித்தேன்.
நான் ஓய்வை அறிவிக்க அதைவிட சிறந்த நேரம் கிடையாது. உங்களுக்கு தோன்றும் போது உடனே நீங்கள் ஓய்வை அறிவிக்க வேண்டும். பெரும்பாலும் அடுத்த வருடம் எனக்கு சென்னையில் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

சென்னை
உங்களிடம் இருந்து சென்னையில் விடைபெற எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். எனது கடைசி போட்டி சென்னையில் இருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஆடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அடுத்த வருடம் இந்தியாவில் போட்டி நடக்கும் போது, தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி
ஆனால் தோனியின் இந்த முடிவு சரியா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தோனி தற்போது மிக மோசமான பார்மில் இருக்கிறார். அவரின் பேட்டிங் சரியாக இல்லை. கடந்த இரண்டு சீசனாக அவர் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். பந்து பேட்டில் பட்டாலே சந்தோச பட வேண்டும் என்ற நிலையில்தான் அவரின் ஆட்டம் உள்ளது.

ஸ்பின் பவுலிங்
முன்பு ஸ்பின் பவுலிங்கில்தான் தோனி திணறினார் என்றால் இப்போது பாஸ்ட் பவுலிங்கிலும் அவர் திணறி வருகிறார். அவரின் பேட்டிங் சிஎஸ்கே ரசிகர்களிடம் கூட விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவரால் பந்தை சரியாக கணிக்க முடியவில்லை. முன்பு போல்ஸ் சிக்ஸ் அடிக்க முடியவில்லை. 27 பந்துகள் பிடித்தால் கூட 20 ரன்களுக்கும் குறைவாகவே அடிக்கிறார்.

விமர்சனம்
பேட்டிங்கில் மொத்தமாக தோனி பார்மை இழந்துவிட்ட நிலையில் அவர் மேலும் ஒருவருடம் ஆட விருப்பப்படுவது விமர்சனங்களை சந்தித்துள்ளது. சென்னையில் தோனி ஓய்வு பெறுவது சரியான முடிவாக சிஎஸ்கே ரசிகர்கள் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வருடம் பெரிய அளவில் ஏலம் நடக்க உள்ளது. புதிய இரண்டு அணிகள் கூட வர உள்ளன.

புதிய
பல வீரர்கள் அணி மாற்றப்படுவார்கள். அப்படி இருக்கும் போது தோனி இப்போதே ஓய்வு பெற்று மெகா ஏலத்தில் புதிய கேப்டனுக்கு வழி விட வேண்டும். புதிய அணிக்கு அவர் வழி வகுக்க வேண்டும். இந்த சீசனில் கோப்பை வெல்ல சிஎஸ்கேவிற்கு வாய்ப்பு உள்ளதால் கோப்பையை வென்றுவிட்டு, தோனி ஓய்வை அறிவிப்பதே சிறப்பாக இருக்கும். ஆனால் தோனி அடுத்த வருடமும் ஆடுவேன் என்று கூறுவது சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்காது.. மிகப்பெரிய ரிஸ்க்காக அமையும்.

மெகா ஏலம்
ஒருவேளை அடுத்த மெகா ஏலத்தில் பேக் அப் கேப்டனை எடுத்து வைத்தால் அது சிஎஸ்கேவிற்கு ஒரு வகையில் உதவியாக இருக்கும். கேன் வில்லியம்சன், வார்னர், ஷ்ரேயாஸ் போன்ற வீரர்களை பேக் அப் கேப்டனாக ஏலத்தில் எடுத்தால் தோனியின் ஓய்விற்கு பின் 2023ம் வருடத்தில் தோனி இல்லாமல் சிஎஸ்கே எளிதாக ஆட முடியும். இல்லையென்றால் மெகா ஏலத்திற்கு பின் புதிய கேப்டனை கண்டுபிடிப்பது சிஎஸ்கே பெரிய சிக்கலாக மாறும்.












Click it and Unblock the Notifications