முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்கிறார் பாஜகவின் சி.டி. ரவி
தேசிய ஜனநாயகக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.
சென்னை: எங்கள் கூட்டணியில் உள்ள பெரிய கட்சி அதிமுகதான். அந்த கட்சிதான் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என்று ஒருவழியாக சொல்லியே விட்டார் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி. இதன்மூலம் அதிமுக, பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டதாக கருதலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அடை மழை காலத்திலும் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
லோச்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் இணைந்து தேர்தலை சந்தித்தனர். இதே கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் நீடிக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் 2021
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. நான்காண்டு காலம் முதல்வராக இருந்த அனுபவத்தில் தமிழகம் முழுவதும் பல தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் வேட்பாளர் சர்ச்சை
தமிழக பாஜக தலைவர் கடந்த சில மாதங்களாகவே முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர். அதே நேரத்தில் பாஜகவில் உள்ள குஷ்புவோ முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று சொல்லி வந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
தமிழக பாஜக தலைவர் முருகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்று கூறியதற்கு அதிமுக தலைவர் பதிலடி கொடுத்து வந்தனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று கூறி வந்தனர். கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் சலசலப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி பேசிய பேச்சுகள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தின.

கே.பி முனுசாமி பதிலடி
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார் கே.பி. முனுசாமி. தேசிய கட்சிகள் அதிமுகவுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவை நம் கட்சியின் தோள் மீதோ, திமுகவின் தோள் மீதோதான் ஏறி பயணிக்க வேண்டும். அதனால், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே போட்டி என்று கூறினார் கே.பி. முனுசாமி.

அதிமுகவே தீர்மானிக்கும்
இந்த நிலையில் இன்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி திருச்சிக்கு வந்திருந்தார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சி.டி. ரவி, சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பெரிய கட்சி அதிமுக தான். அதனால், அக்கட்சியே யார் முதல்வர் வேட்பாளர் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளும் என்றார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
தமிழகத்தில் பாஜக சிறிய கட்சிதான். எனவே அதிமுக முடிவு செய்யும் முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார். பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கே.பி.முனுசாமி பேசியதை நாங்கள் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார் சி.டி. ரவி. இதன்மூலம் அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதலாம்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications