கடலுக்கு "மீன்" பிடிக்க சென்றவர்களுக்கு ஷாக்.. வலையில் என்ன அது "மஞ்சளாக".. எடுத்து பார்த்தால்.. ஆ
சென்னை: கடலூர் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் மிகவும் வித்தியாசமான மீன் ஒன்று பிடிபட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலில் அவ்வப்போது மீனவர்கள் வித்தியாசமான மீன்களை பிடிப்பது வழக்கம். சில மீன்கள் பல கோடி ரூபாய்க்கு கூட விற்பனை ஆகி இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் கூட மகாராஷ்டிராவில் மும்பை அருகே மீனவர் ஒருவர் ஒரே நாளில் 1.33 கோடி ரூபாய் சம்பாதித்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் தாரே. மும்பை அருகே இருக்கும் பால்கார் கடல் பகுதியில் இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.

என்ன நடந்தது: மும்பை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென இவரின் வலை அதிக எடையோடு காணப்பட்டு இருக்கிறது. எப்போதும் பெரிய மீன்கள் சிக்கினால் எப்படி வலை இழுக்குமோ அந்த அளவிற்கு வலை அவரை இழுத்துள்ளது. கஷ்டப்பட்டு வலையை இழுத்து கப்பலுக்குள் போட்டவருக்கு ஷாக்!
காரணம்.. அவர் வலையில் சின்ன சின்ன கோல் (ghol) மீன்கள் 157 இருந்துள்ளது. மொத்தமாக ஒரே வலையில் 150 கோல் மீன்கள் மாட்டுவது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. உலகின் விலை உயர்ந்த மீன்களில் கோல் மீன்களும் ஒன்றாகும். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இந்த மீன்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி.
மீன்கள் எப்படி: அதீத மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்கள் பல்வேறு மருந்துகள், அழகுசாதன பொருட்கள், விலை உயர்ந்த எண்ணெய்கள் தயாரிக்க பயன்படுகிறது. வைன், மதுபானம் தயாரிப்பு, உடலில் தையல் போடுவது, சில உயிர்காக்கும் மருந்துகளில் இந்த மீனின் பாகங்களில் இருந்து எடுக்கப்படும் சாறுகள் பயன்படுத்தப்படுகிறது . இந்தோனேசியா, அமெரிக்கா, தாய்லாந்து, ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளில் இதற்கு ஏகப்பட்ட கிராக்கி.
கடலூர்; இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இதேபோல் கடலூர் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் மிகவும் வித்தியாசமான மீன் ஒன்று பிடிபட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிப்பு அமலுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அடுத்த சீசனுக்கு மீன்கள் கடலில் இருக்கவும் மீன்பிடி தடைக்கலாம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இந்த காலத்திற்கு பின் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அது போன்ற சமயங்களில் மீன் வாங்க பலரும் ஆசைப்படுவதால் மீன் விலையும் அதிகமாக இருக்கும். மீன் பிடி தடைக்காலத்திற்கு பின் வரிசையாக பலரும் மீன் வாங்குவதற்காக முந்தி அடிப்பதால் மீன் விலை அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்த முறை வழக்கத்தை விட அதிக அளவில் மீன் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. காரணம் மீன் பிடி தடை காலத்திற்கு பின்பும் பெரிதாக மீன் வரத்து இல்லை. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பெரிதாக மீன் பிடிக்காமல் குறைந்த அளவு மீன்களுடன் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மீன் பிடி தடை காலத்திற்கு பின் கடலுக்கு சென்ற கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் புகழரசன், பிரசன்னராஜ் ஆகியோருக்கு 5.5 கிலோ எடை கொண்ட அதிசய கனவா மீன் சிக்கியது. முதலில் மஞ்சள் நிறத்தில் வலையில் வித்தியாசமான மீன் ஒன்று சிக்கி உள்ளது. என்ன இது என்று அதிசயமாக மீனவர்கள் அதை பார்த்து உள்ளனர்.
மஞ்சள் நிறத்தில் உள்ளது, எடையும் அதிகமாக உள்ளதே என்று குழம்பி உள்ளனர். கடைசியில்தான் அது கனவா மீன் என்று தெரிந்துள்ளது. வழக்கத்தை விட அதிக எடைகொண்டிருந்த அதிசய கனவா மீன் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications