டெடிபேர் உண்டியலுடன் வந்து எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முன்னிலையில்.. உதயநிதியிடம் நிதி கொடுத்த சிறுமி
சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய உண்டியல் சேமிப்பை அப்படியே உண்டியலோடு கொண்டு வந்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சசர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது.
Recommended Video
சிறுமியின் செயலால் நெகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின் சிறுமியை வெகுவாக பாராட்டினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நிவாரணத்திற்காக தாராளமாக நிதி வழங்குங்கள் என முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடம் கேட்டார். இதையடுத்து ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

சேமிப்பு பணம்
அந்த வகையில் சிறு குழந்தைகளும் தங்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடமும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடமும் கொடுத்து வருகிறார்கள். சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்திருந்த காசு, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆகும் செலவு, உண்டியல் பணம் என கொடுத்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள்
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது வடலூரைச் சேர்ந்த சாகுல் ஹமீத்- பரக்கத் நிஷா தம்பதியின் மகள் அஃபினா பாத்திமா நிகழ்விடத்திற்கு வந்தார்.

உண்டியல் சேமிப்பு
அப்போது தனது உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில்தான் சிறுமி தனது பெரிய மனதை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்தார்.

அசத்தும் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். நிவாரண நிதியை ஊக்குவிக்கவும் செய்கிறார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மிகவும் உதவியாக இருந்து வருகிறார்.

சிறுமி
இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுமி உண்டியலுடன் கொடுத்த பணத்தை பெற்ற உதயநிதி சிறுமியை வெகுவாக பாராட்டினார். குழந்தைகள் ஒரு ரூபாய் நிவாரணமாக கொடுத்தாலும் அதை பாராட்டி அவர்களை அரசு ஊக்குவிக்கிறது. இது பல சிறுவர்கள், சிறுமிகளுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன், சிவி கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இளைஞர்கள்
வருங்கால பாரதம் இளைஞர்கள் கையில் என்ற கூற்றுக்கேற்ப இந்த சிறுவர்கள் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து இவ்வாறு செய்து வருவது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இவர்கள் கொடுக்கும் உதவி, பெரியவர்களையும் நிதியுதவி அளிக்க தூண்டுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications