Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணாமலைக்கு இது இறுதி எச்சரிக்கை.. இனியும் பொறுக்க மாட்டோம்.." ஆவேச அட்டாக் மோடில் சி.வி. சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சனாதனம் பற்றிப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும் சமீபத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. இதற்கு அதிமுகவில் இருந்து கடும் எதிர்வினை வருகிறது.

CV Shanmugam burst out against Annamalai for his remarks on ANna

சி.வி.சண்முகம்: இதற்கிடையே கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இது குறித்து ஆவேசமாக சில கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் இருந்து தேசிய கட்சிகளை விரட்டி அடித்துள்ளோம். எந்தவொரு தேசிய கட்சியாக இருந்தாலும் சரி இங்கே இடமில்லை. தமிழ்நாடு என்றால் இது திராவிட இயக்கம் நிறைந்த ஒரு மாநிலம். இங்கே தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று விரட்டி அடித்து 56 ஆண்டுகள் ஆகிறது. அதற்குக் காரணகர்த்தா பேரறிஞர் அண்ணா.

அவர் இல்லையென்றால் நான் இங்கே மேடையில் ஒரு எம்பியாக இருந்து பேசியிருக்க முடியாது. ஒரு வழக்கறிஞராக நான் கல்லூரியில் படித்திருக்க முடியாது. இன்று மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையை அயரன் செய்து போட்டு உட்கார்ந்து இருக்கிறோம் என்றால் இருக்கிறோம் என்றால் அதைக் கொடுத்தவர் அண்ணா. ஒரு சாதாரண கூலித் தொழிலாளியும் இங்கே அமரலாம்.. பேசலாம்.. அவர்களுக்கும் சம உரிமையைப் பெற்றுத் தந்தவர் அண்ணா.

மாற்றிக் காட்டியவர்: அண்ணா காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் முன்பு இங்கே இருந்தவர்கள் யார் எனப் பாருங்கள். காமராஜர், கக்கனை என ஒரு சிலரைத் தவிர அப்போது பெரும் பணக்காரர்கள் மட்டுமே சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தனர். பெரும் செல்வந்தர்கள் மட்டுமே எம்பி, எம்எல்ஏவாக முடியும் என்ற சூழல் இருந்தது. அந்த நிலையை மாற்றி.. சாதாரண நபர்கள், மாற்று வெட்டி கட்ட கூட இல்லாதவர்களை எல்லாம் சட்டசபை, நாடாளுமன்ற மற்றும் அமைச்சர்களாக ஆக்கி அழகு பார்த்தவர் அண்ணா.

நம்மை போலத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் அண்ணா.. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இங்கே 93% இருக்கிறார்கள். முன்னேறிய பிரிவினர் 6% மட்டுமே இருக்கிறார்கள்.

அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர்: 1967இல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது. இந்த 93% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. படிப்பு இல்லை. அத்தனை வேலைவாய்ப்பு படிப்பு என அத்தனையும் அந்த 6% மக்களுக்கே கிடைத்தது. சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திலும் அவர்களே இருந்தார்கள். அதை மாற்றி அனைவருக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் அண்ணா..

அனைவருக்கும் சம உரிமை, இட ஒதுக்கீடு, சீர்திருத்தத் திருமணத்தை அங்கீகரிப்பது, பெண்களுக்குச் சம உரிமை, தமிழுக்கு முக்கியத்துவம், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நாட்டிலேயே கேரளாவுக்கு அடுத்து காங்கிரஸ் பேரியக்கம் தோற்கடிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. கேரளாவிலாவது அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். அங்கே காங்கிரஸ், இடதுசாரிகள் என மாறி மாறியே ஆட்சி நடக்கிறது. ஆனால், இங்கே 56 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை விரட்டி அடித்துள்ளன.

தகுதி இல்லை: பெரியார், அண்ணா இல்லை என்றால் தமிழ்நாடு இன்று இல்லை. அவர்கள் இல்லையென்றால் நாம் இன்னும் கூலித் தொழிலாளியாகத் தான் இருந்து இருப்போம். படிப்பில், பொருளாதாரத்திலும் நாம் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்றால் அதற்கு வித்திட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும் தான். அப்படிப்பட்ட அண்ணாவை அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். நீங்கள் 1959இல் நடந்ததாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறீர்கள். அந்தச் சம்பவத்திற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த அண்ணா குறித்துப் பேச உங்களுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. பாஜக தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்காகப் பிரதமர் மோடி நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதிமுகவின் பலம் மோடி, அமித் ஷாவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், அண்ணாமலைக்குத் தெரியவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவதை ஏற்க முடியாது.

உள்நோக்கம்: முதலில் ஜெயலலிதாவை விமர்சித்தார். இப்போது அண்ணாவை விமர்சிக்கிறார். அவர் தெரியாமல் பேசவில்லை. அண்ணாமலை திட்டமிட்டு அண்ணாவைத் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். உங்களுக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும். இனியும் இதுபோன்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி பேச்சுவதை பார்த்தால் உள்நோக்கத்தோடு திமுகவுடன் இணைத்துச் செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

லோக் சபா தேர்தலில் அதிமுக தேவை என்பதை பாஜக தேசிய தலைமை உணர்ந்துள்ளது. ஆனால், அதற்கு நேர் எதிராக அண்ணாமலை செயல்படுகிறார். மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை.

இறுதி எச்சரிக்கை: அண்ணாமலை இப்போது பாத யாத்திரை என ஒன்றுக்குச் செல்கிறார். அது குறித்து யாருக்கும் கவலை இல்லை. இதனால் நானும் ரவுடி தான் என்பதைப் போல அவர் தனது இருப்பை காட்டி இப்படிப் பேசுகிறார். இனியும் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.. இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை" என்று அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+