களமிறங்கும் "சைபர் காப்ஸ்".. பல சோஷியல் மீடியா ஐடிக்களுக்கு வரப்போகும் செக்.. காவல் ஆணையர் அதிரடி!
சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் சிறார் குற்றங்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறார்கள் குற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. முக்கியமாக 2016-2020 கேஸ் தரவுகளை எடுத்துக்கொண்டால் சிறார்கள் அதிகரித்துள்ளது தெளிவாகி உள்ளது. கொலை, கொள்ளை, பெட்டி கேஸ்களில் சிறார்கள் கைதாவது தமிழ்நாட்டின் அதிர்ச்சி அளிக்கும் நிதர்சனமாக மாறி உள்ளது.
முந்தைய ஆண்களோடு ஒப்பிடும் போது கடந்த 2016-2020 வரை மொத்த கேஸ்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் பெரிதாக உயரவில்லை என்றாலும் கூட சிறார்களின் குற்றங்கள் அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களில் சிறார்களின் குற்றங்கள் உயர்ந்து உள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றங்கள்
2016ல் நடைபெற்ற 1603 பெரிய குற்றங்களில் 48 குற்றங்கள் சிறார்கள் மேற்கொண்டது. இதே எண்ணிக்கை 2020ல் 1661 குற்றங்களில் 104 குற்றங்கள் சிறார்கள் செய்த குற்றங்களாக உயர்ந்து உள்ளது. அதாவது 2016ல் 3 சதவிகிதமாக இருந்த சிறார் குற்றங்கள் 2020ல் 6.3 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் அதிகம் ஆகியுள்ளது. இன்னொரு பக்கம் சைபர் குற்றங்களும் தமிழ்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள், மோசடிகள், சமூக வலைத்தளங்களில் நடக்கும் ஏமாற்று வேலைகள் என்று சமூக வலைத்தளங்களில் நிறைய குற்றங்களும் நடந்து வருகின்றன. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் சிறார் குற்றங்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சிறார் குற்றங்களை தடுக்க நிறைய திட்டங்களை வைத்து இருக்கிறோம். இளம் வயதிலேயே சிறார்களை நல் வழிப்படுத்த வேண்டும். இதற்காக சிறுவர், சிறுமியர் பல்வேறு ஆக்கபூர்வமான விஷயங்களை மேற்கொள்ளும் வகையில் குழுக்கள், கிளப்புகள் உருவாக்கப்படும். சென்னையில் உள்ள சிறார் கிளப்புகள் 105ல் இருந்து 156 ஆக உயர்த்தப்படும்.

நல்ல திசை
இதன் மூலம் கல்வி தொடர்பான விஷயங்கள் மட்டும் விளையாட்டு, பல்வேறு கலைகள் குறித்தும் சிறார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்கள் நல்ல திசையில் கொண்டு செல்ல இது வழி வகுக்கும். எங்கள் புள்ளி விவரத்தின்படி 70 சதவிகித சிறார் குற்றங்கள் குடிசை பகுதிகளில் நடக்கின்றன.

விழிப்புணர்வு
இதனால் அங்கு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும். அங்கு அதிக கிளப்புகள் அமைக்கப்படும். அதேபோல் சிறார்கள் போதை பொருள் பக்கம் திரும்பாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் சைபர் குற்றங்களை தடுக்க தீவிரம் காட்டி வருகிறோம். 5 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களை அமைக்கும் முடிவில் இருக்கிறோம்.

நான்கு நகரம்
சென்னை சைபர் பிரிவு தவிர்த்து இன்னும் 4 பெரிய நகரங்களில் போலீஸ் நிலையங்களை அமைக்க உள்ளோம். புதிய கருவிகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பணிகளை மேற்கோள்ள போகிறோம். நாங்கள் சமூக வலைத்தளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 400 ஐடிகளை தீவிரமாக சமூக வலைத்தளங்களில் கண்காணித்து வருகிறோம். தவறான போஸ்டுகள், சோஷியல் மீடியா குற்றங்களை மேற்கொள்ளும் ஐடிக்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.












Click it and Unblock the Notifications