“தீபாவளி பரிசு காத்திருக்கிறது”.. சைபர் மோசடிகளில் சிக்கி ஏமாந்துடாதீங்க.. காவல்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், "பரிசுக் கூப்பன் விழுந்திருக்கிறது", "பரிசு விழுந்திருக்கிறது" என்ற பெயரில் அதிக அளவில் மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக காவல்துறை எச்சரித்துள்ளது. போலியான இணையதளங்களில் இருந்து வரும் தகவல்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், பரிசு கூப்பன் எனக் கூறி லிங்குகளை அனுப்பி ஆசை காட்டி மோசடி வழையில் வீழ்த்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு போன்ற தருணங்களில் சிறப்பு ஆஃபர் எனக் கூறி கவர்ச்சிகரமான தகவல்களை அனுப்பி மோசடி வலையில் வீழ்த்துவது வாடிக்கையாகி வருகிறது.

Cyber Crime Police Warn of Rising Online Scams Offering Gift Coupons Ahead of Diwali

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, போலியான E-commerce இணையதளங்கள், போலியான சமூக வலைத்தளப் பக்கங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, APK ஃபைல்களை க்ளிக் செய்து மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து பிறகு ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மோசடியாளர்கள் வாட்ஸ் அப் மூலம் ஒரு லிங்க் அனுப்புகிறார்கள். அதில் உங்களுக்கு தீபாவளி பரிசு விழுந்திருக்கிறது, இந்த கோப்புகளைத் திறந்து அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என வருகிறது. ஒருவேளை, அந்த ஏபிகே ஃபைலை திறந்தால், அது உங்கள் செல்போனில் தகவல்களை திருடி, வங்கியிலிருந்து பணத்தையும் மோசடி செய்ய வழி வகுகிறதாம்.

செகந்தராபாத்தில், 29 வயதான பெண்ணுக்கு, அவர் வழக்கமாக பொருள்கள் வாங்கும் ஒரு இணையதளத்தின் பெயரில் வாட்ஸ்ஆப் தகவல் வந்துள்ளது. அதில் தீபாவளி பரிசு பெற உங்கள் பெயர் தேர்வாகியிருக்கிறது, ஐஃபோன் 13 உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

பிறகு, அந்த செல்போனைப் பெற வரி செலுத்த வேண்டும் என்று ஒரு சிறு தொகையை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். பிறகு படிப்படியாக சிறு சிறு தொகையாக ரூ.1.40 லட்சம் வரை ஏமாந்தபிறகே அவர் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், ஒருவர், கூகுளில் சென்று தவறான வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைப் பெற்று அதனைத் தொடர்புகொண்டபோது, அதில் பேசிய மோசடியாளர் உதவிகளைப் பெற இந்த லிங்கைத் திறக்கவும் என்று வாட்ஸ் - அப்பில் ஏபிகே செயலியை அனுப்பியிருக்கிறார்.

அதனை ஓபன் செய்தபோது, அந்த மால்வேர் அவரது செல்போனை ஒட்டுமொத்தமாக முடக்கி, அதிலிருந்து மோசடியாளர்கள் ரூ.1 லட்சத்தை பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். எனவே, எந்த விளம்பரத்தையும் பார்த்து மக்கள் ஏமாறக் கூடாது என்றும், தீபாவளிக்குப் பரிசு, கூப்பன் என்று தனிப்பட்ட தகவல்களை கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

பல மோசடி பேர்வழிகள் போலி இணையதளங்கள், இணைப்புகள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவர்களிடமிருந்து பணத்தையும் தனிப்பட்ட விவரங்களையும் திருட முயற்சிக்கின்றனர். குறிப்பாக பண்டிகைக் காலத்தில், கவனத்துடன் ஷாப்பிங் செய்வதும் விழிப்புடன் இருப்பதும் மிகவும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+